வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மூளை இல்லாத முட்டா பீசு.. பலியாடை தீனி போட்டு வளர்க்கும் பிக்பாஸ் மாயா

Maya-Biggboss 7: பிக்பாஸ் எல்லாம் ஒரு நிகழ்ச்சியா என கேட்டவர்கள் கூட இப்போது அதை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் கடந்த சில வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கும் பஞ்சாயத்து தான். அதிலும் மாயா செய்யும் அட்டூழியம் இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் டைட்டிலை அடிக்க வேண்டும் என்பதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார். அதன் விளைவு தான் சமீப காலமாக அவர் திட்டம் போட்டு ஒவ்வொருவரையும் வீழ்த்தி வருகிறார். அதில் பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதில் மாயாவுக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது.

அந்த வகையில் ஒவ்வொன்றையும் பக்காவாக செய்து வரும் இவர் தற்போது அடுத்த பலியாடை தீனி போட்டு வளர்த்து வருகிறார். ஏற்கனவே ஐஷு, நிக்சன் விவகாரத்தில் இவர் சில பல வேலைகளை பார்த்தார். அதுவே சர்ச்சைகளுக்கு ஆளாகி ஐஷு வீட்டை விட்டு வெளியேறுவதற்கு வழி வகுத்தது.

Also read: இந்த ஆயா கிட்ட இருந்து ஆம்பளைங்க சூதானமா இருங்க.. மாயாவை கிழித்து தோரணம் கட்டிய பிரபலம்

அதைத்தொடர்ந்து இப்போது அவருடைய டார்கெட் ஜோவிகா தான். ஏற்கனவே கேப்டன்சி டாஸ்க்கின் போது இவருக்கு சப்போர்ட் செய்வது போல் வந்து பக்கா பிளான் போட்டு வீழ்த்தினார்கள். அதை கூட உணராத ஜோவிகா இப்போது அவர்களின் கூட்டணியில் இணைந்து வெறுப்புகளை சம்பாதித்து வருகிறார். இதை விசித்ரா நேற்றைய எபிசோடில் வெளிப்படையாக கூறினார்.

அதாவது தன்னை காலை வாரி விடுறாங்க என தெரியாமலேயே இந்த பொண்ணு அவங்க கூட சுத்திட்டு இருக்கு. இது செவிடா இல்ல கூட இருந்து அவங்கள தோற்கடித்து மேல வருதா தெரியலை. அதனாலதான் இவளுக்கு மூளையே இல்ல அப்படின்னு சொல்றேன் என புலம்பி கொண்டு இருந்தார். ஆனால் நிச்சயம் இப்படி ஒரு கேம் ப்ளான் ஜோவிகாவிடம் கிடையாது.

அவர் தன்னை பலியாடாக மாற்றுகிறார்கள் என்று தெரியாமல் தான் மாயா குரூப்பிடம் பழகி வருகிறார். ஏனென்றால் ஆரம்பத்தில் இவர் மெச்சூரிட்டியாக இருப்பது போல் தான் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் போகப் போக ஒவ்வொரு விஷயத்திற்கும் சரியாக முடிவெடுக்க முடியாமல் திணறுவது அப்பட்டமாக தெரிகிறது. அந்த வகையில் மாயாவின் அடுத்த பலியாடு இவர்தான்.

Also read: பிரதீப் வாயை திறந்தால் மொத்தமும் காலி.. மரண பீதியில் மாயா மறைக்கும் உண்மை

Trending News