பிக்பாஸ் ஓடிடியில் கலக்கப் போகும் 7 போட்டியாளர்கள்.. ஆர்மியை தொடங்கும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அதில் ரசிகர்கள் ஆதரவுடன் ராஜு டைட்டிலை தட்டிச் சென்றார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த கையோடு விஜய் டிவி தற்போது பிக்பாஸ் ஓடிடி எனும் நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்ப இருக்கிறது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியை காணும் ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

கடந்த நான்கு சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் முக்கியமான சிலர் இதில் பங்கேற்க இருக்கின்றனர். அதாவது எந்த பிரபலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்து, டிஆர்பியை ஏற்றினார்களோ அவர்கள் தான் இந்த பிக்பாஸில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

12 போட்டியாளர்கள் 60 நாட்கள் தங்கும்படி அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது உறுதி செய்யப்பட்ட 7 போட்டியாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

ஓவியா திரைப்படங்களின் மூலம் அவ்வளவாக பிரபலமாகாத இவர் பிக் பாஸ் என்ற ஒரே நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். இவருடைய ரசிகர்கள் இவருக்காக தனி ஆர்மியை உருவாக்கி சோசியல் மீடியாவை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலி ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாக பார்க்கப்பட்ட அவர் ஓவியாவுடன் மல்லுக்கட்டி தனக்கு இருந்த அத்தனை நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார். இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் ரசிகர்கள் இன்னும் இவரை கலாய்த்து வருகின்றனர்.

சினேகன் கவிஞர் சினேகனாக இருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கட்டிப்பிடி சினேகனாக மாறினார். அதைத் தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இருக்கும் இவர் மீண்டும் இந்த பிக்பாஸ் ஓடிடியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

பரணி பிக்பாஸ் முதல் சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இவர் இருந்தார். ஆனால் வீட்டில் இருந்த போட்டியாளர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் இவர் சுவர் ஏறி குதிக்கும் அளவுக்கு சென்றார். அந்த அளவுக்கு மன உளைச்சலில் இருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது இவர் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

வனிதா விஜயகுமார் இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலேயே அதிக பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் தான். இதன் காரணமாகவே எலிமினேட் ஆகி வெளியே சென்ற பிறகும் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் அதிக பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபிராமி இவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் உடன் காதல் சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.

சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த சீசனின் போட்டியாளராக களமிறங்கிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். தேவையற்ற வார்த்தைகளை விட்டு பரபரப்பை ஏற்படுத்த கூடிய ஒரு போட்டியாளராக இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.