திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பவானிக்கு தரமான பதிலடி கொடுத்த ராஜு.. பிக் பாஸ் டைட்டில் உங்களுக்குத்தான்

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இறுதி வாரத்துக்கான ஓப்பன் நாமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் யாரை நாமினேட் செய்ய விரும்புகிறார்களோ அவர்களின் கழுத்தில் மாலையைப் போட வேண்டும் என்ற அறிவிப்பு வருகிறது.

அப்படி மாலையை போட்டுநாமினேட் செய்பவர்கள் அதற்கான காரணத்தை சரியாக கூற வேண்டும். நாமினேட் ஆனவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். அதில் ராஜு தன்னை நாமினேட் செய்த பவானி ரெட்டியிடம்  அதற்கான விளக்கத்தை கொடுத்தார்.

ராஜுவை நாமினேட் செய்த பவானி, வீட்டில் இருக்கும் அத்தனை பேர்களில் நீங்கள் என்னை மட்டும் தான் டார்கெட் செய்கிறீர்கள் என்று கூறினார். அதற்கு பதிலளித்த ராஜு நான் எல்லாரையும் தான் நாமினேட் செய்கிறேன், எல்லாரிடமும் தான் எனக்கு சண்டை வருகிறது என்றார்.

ஆனால் பவானி ரெட்டி, ராஜீவின் விளக்கத்தை ஏற்க மறுத்து நான் சமாதானமாக பேச வரும்போது நீங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்று சொல்கிறார். அதை ஆமோதித்த ராஜு, ஆமாம் நீ இன்னிக்கு ஒரு மாதிரி பேசுற, திரும்பவும் நாளைக்கு வேற மாதிரி பேசுற. நீ எப்பவும் மாத்தி மாத்தி தான் பேசுவ.

அதனால் உன்னிடம் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கிறது எனக்கு நல்லதுன்னு தோணுது. மேலும் உன்னை எந்த ஒரு விஷயத்துலயும் நம்ப முடியாது. கமல் சார் வரும்போது நல்லா பேசுற நீ, மறுநாள் யார்கிட்ட சிரிச்சு பேசறியோ, அவங்களையே தப்பா பேசுவ என்று பவானிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

ராஜுவின் இந்தப் பேச்சால் அதிர்ந்த பவானி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் பழைய பிரச்சனைகளை பற்றி பேச ஆரம்பித்தார். அதை சுட்டிக்காட்டிய ராஜு இதுக்குத்தான் நான் உன்கிட்ட இருந்து தள்ளி இருக்கேன் என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டார்.

ராஜு, பவானியை பற்றி கூறியது ரொம்பவும் சரியானது என்று பிக்பாஸ் ரசிகர்கள் அவரை தற்போது பாராட்டி வருகின்றனர். மேலும் ராஜூ தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் பலரும் அவரை சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் இவ்வளவு நாள் நாமினேஷனில் தப்பித்து வந்த பவானி இந்த வாரம் நிச்சயம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.

Trending News