சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ரெண்டுல ஒன்னு பாக்கலாமா.. களைகட்ட போகும் பிக்பாஸ் சீசன் 7, கிராண்ட் லான்ச் எப்போது தெரியுமா?

Biggboss 7: பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த அந்த நாள் இப்போது வரப்போகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ களைக்கட்டி வந்த நிலையில் தற்போது கிராண்ட் லான்ச் எப்போது என்பதை ஆண்டவர் தன்னுடைய ஸ்டைலில் கூறி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

விஜய் டிவியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் உலகநாயகன் தான் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. போட்டியாளர்களின் மனம் நோகாதவாறு கண்டித்து அறிவுரை கூறி இவர் நிகழ்ச்சியை வழிநடத்தும் விதம் அனைவருக்கும் பிடித்தமானது.

Also read: பிக்பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் நான்கு கதாநாயகிகள்.. டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட பக்கா பிளான்

இதுவே நிகழ்ச்சியின் டிஆர்பியையும் நம்பர் 1-க்கு கொண்டு செல்லும். அது மட்டுமல்லாமல் பிக்பாஸ் சீசன் தொடங்கி விட்டாலே மற்ற போட்டி சேனல்கள் அனைத்தும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருக்க வேண்டும்.

அந்த அளவுக்கு சுவாரஸ்யம் மிகுந்த இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஆரவாரமாக தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Also read: எகிற போகும் டிஆர்பி, என்ட்ரி கொடுக்கும் தலைவி.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ்

அதிலும் ஆண்டவர் அதில் வீடே ரெண்டாயிடுச்சு, என்டர்டெயின்மென்ட்டும் 2 ஆயிடுச்சு. ரெண்டுல ஒன்னு பார்க்கலாமா என்று கேட்டுவிட்டு, இந்த முறை இரண்டையும் பார்க்கலாம் என்று கூறுவது போல் அந்த ப்ரோமோ அமைந்துள்ளது.

அந்த வகையில் தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களின் லிஸ்ட் இணையதளத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் எதிர்பாராததை எதிர்பார்க்க வைப்பது தான் இந்த நிகழ்ச்சி. அதனால் இந்த பிக்பாஸ் பல சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்டுடன் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: நடுரோட்டில் சந்தி சிரித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. ஆத்திரத்தில் கதிர் செய்த காரியம்

Trending News