வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நான் அப்படிபட்ட பொண்ணு இல்ல.. பிக்பாஸ் ஷிவானியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி எப்படியாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பெற்று விடலாம் என நம்பிக் கொண்டிருந்த சிவானி கடைசி சில நாட்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பெரும்பாலும் பிக் பாஸ் வீட்டில் ஷிவானி சக போட்டியாளர் பாலாஜி என்பவருக்கு ஆயா வேலை பார்த்ததாக பலரும் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்தனர். இருந்தாலும் கடைசி நேரத்தில் ஒரு போட்டியில் தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளாராம் ஷிவானி நாராயணன். அதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அனைத்து கவர்ச்சி புகைப்படங்களை நீக்கி விட்டாராம்.

பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானியின் தாயார் ஷிவானியை ஒருமையில் திட்டியது பலருக்கும் சங்கடத்தைக் கொடுத்தது. பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் வலையில் சிக்கிய தன் மகனை கண்டித்த தாயார், சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடும் போது எங்கே போனார்? என கேள்வி எழுப்பினார்.

ஒருவேளை அதை எல்லாம் தெரிந்துகொண்டு தான் சிவானி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள அனைத்து கவர்ச்சி புகைப்படங்களை நீக்கி விட்டார் போல என பேச்சுகள் எழுந்துள்ளன. மேலும் இனி அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட மாட்டேன் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் தெரிவித்துள்ளாராம் ஷிவானி.

shivani-cinemapettai-01
shivani-cinemapettai-01

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் சரியாக நாலு மணிக்கு கவர்ச்சி புகைப்படத்தை சிவானி வெளியிடுவார் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துவிட்டதாம் அம்மணியின் முடிவு.

Trending News