வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கோர்த்து விடுவோம் அடிச்சுகிட்டு சாவட்டும்.. மொத்தமாக ஆப்படிக்க கோதாவில் குதித்த பிக்பாஸ் ராஜமாதா

Biggboss 7: இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் போராக சென்றாலும் ஒரு சில சம்பவங்கள் வெறித்தனமாக தான் இருந்தது. அதிலும் நேற்றைய எபிசோடில் நடந்த ரணகள சம்பவங்கள் இன்று ஆண்டவரால் நிச்சயம் விவாதிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த அளவுக்கு விசித்ரா, அர்ச்சனா இருவரும் கோதாவில் இறங்கி போட்டியாளர்களுக்கு ஆட்டம் காட்டினார்கள். அதாவது இந்த வாரத்தில் சிறப்பாக பங்களிக்காத போட்டியாளர்கள் யார் என பிக் பாஸ் கேள்வி எழுப்பினார். உடனே ஒட்டு மொத்த போட்டியாளர்களும் விச்சு அச்சுவை கை காட்டினார்கள்.

இதில் கூடவே இருந்த செவ்வாழை தினேஷும் அடக்கம். இதனால் கோபமான விசித்ரா இனிமே தான் என்னோட பார்ட் 2 வ பாக்க போறீங்க என கொந்தளித்தார். அதை தொடர்ந்து கார்டன் ஏரியாவில் அமர்ந்து கொண்டு ஜெயிலுக்கு போக மாட்டோம் என போராட்டம் நடத்தினார்கள்.

Also read: விஜய் டிவி காலில் விழுந்து ஹோஸ்ட் ஆன கமல்.. எக்ஸ்பயரி முடிஞ்ச தாத்தா என அசிங்கப்படுத்திய பிக்பாஸ் பெண் சைக்கோ

கேப்டன் தினேஷ் சொல்லியும் கூட அவர்கள் கேட்கவில்லை. அதை தொடர்ந்து அவர் உணவு கொடுத்த போது கூட சாப்பிடாமல் இரண்டு சிங்கமும் வேட்டைக்கு தயார் என்பது போல உட்கார்ந்து இருந்தது. அப்போது நடந்த சம்பவங்கள் தான் வீடியோவாக இப்போது சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதிலும் விசித்ரா செய்த அட்ராசிட்டி வேற லெவல் ஆக இருந்தது. இந்த வயதிலும் ஒவ்வொரு பிரச்சனையையும் அவர் சமாளிக்கும் விதம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் அவர் பிக்பாஸ் வீட்டின் ராஜமாதாவாக தான் பலரின் கண்களுக்குத் தெரிந்தார். அந்த அளவுக்கு அவர் தன்னுடைய கேமை பக்கா பிளானோடு கொண்டு செல்கிறார்.

அவருடன் அர்ச்சனாவும் சேர்ந்து கொண்டு செய்யும் அலப்பறைகள் தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு வழியாக ஜெயிலுக்கு போன அவர்கள் எப்படி மாயா, பூர்ணிமா இருவரையும் காலி செய்வது என்ற பிளானையும் போட்டார்கள். அதில் தினேஷின் யுக்தியை உடைக்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.

Also read: இவரா, அவரா வெளியேறப் போவது யாரு.? கடைசி நேரம் வரை ஆட்டம் காட்டும் பிக்பாஸ்

அப்போது விசித்ரா எல்லாரையும் கோர்த்து விடுவோம் மொத்தமா அடிச்சுக்கிட்டு சாகட்டும் என்று கூறியதுதான் ஹைலைட். இப்படியாக பரபரப்போடு நகரும் பிக்பாஸ் அடுத்தடுத்த வாரங்களில் வெட்டு, குத்து, சண்டை என சென்றாலும் விஜய் டிவிக்கு கொண்டாட்டம் தான்.

Trending News