Biggboss 8: எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் சீசன் சில பல சர்ச்சைகளை சந்தித்தது. அதிலும் முக்கியமாக சோசியல் மீடியாவில் பி ஆர் டீம் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.
ஆரம்பத்தில் சௌந்தர்யாவுக்கு ஆதரவாக பல கமெண்டுகள் வரத் தொடங்கியது. அவர் ஒண்ணுமே செய்யலைன்னாலும் கூட புகழ்ந்து தள்ளி போஸ்ட் போட ஆரம்பித்தனர்.
அதன் பிறகு தான் இந்த பி ஆர் மாஃபியா பற்றிய குட்டுகள் வெளிவர தொடங்கியது. மேலும் வாரங்கள் செல்ல செல்ல முத்துவுக்கான ரசிகர்களின் வட்டம் பெருகியது.
எங்கே அவருக்கு டைட்டில் கிடைத்து விடுமோ என்ற பதட்டத்தில் சௌந்தர்யாவின் பி ஆர் டீம் படுமோசமாக இறங்கியது. முத்து பற்றி சில நெகட்டிவ் விஷயங்களையும் அவர்கள் பரப்ப தொடக்கிறார்கள்.
கதறும் சவுண்ட் ஃபேன்ஸ்
அதை அடுத்து சோசியல் மீடியாவே அனல் பறக்க ஆரம்பித்தது. மாற்றி மாற்றி இரு தரப்பும் நெகட்டிவிட்டியை பரப்ப தொடங்கினார்கள்.
இது பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது இந்த சீசன் டைட்டிலை வென்றுள்ளார் முத்துக்குமரன். இரண்டாவது இடத்தை விஷால் பிடித்துள்ளார்.
சௌந்தர்யாவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்திருக்கிறது. அதை தாங்க முடியாத ரசிகர்கள் முத்துவை திட்டி தீர்க்கின்றனர்.
எந்த சீசனிலும் இப்படி கிடையாது. இந்த சீசன் டைட்டில் வின்னரை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது அவருடைய திறமையாலும் உழைப்பாலும் வரவில்லை.
அவருக்காக வெளியில் நிறைய பேர் பி ஆர் வேலை பார்த்தார்கள். அதனால் தான் இந்த வெற்றி கிடைத்தது என கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.
இதிலிருந்து அவர்களின் வயித்தெரிச்சல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதை குறிப்பிடும் முத்துவின் ரசிகர்கள் பத்தல இன்னும் நல்லா கதறுங்க என கலாய்த்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.