Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் செங்கல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கடுமையான டஃப் கொடுத்து விளையாடினார்கள்.
அதில் முத்து பவித்ரா ஜெஃப்ரி ஆகியோர் சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தான் அடுத்த வாரம் கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்றனர்.
ஆனால் அதில் தான் சொதப்பல் நடந்தது. ஜெஃப்ரி அவுட் ஆன நிலையில் முத்து பவித்ரா விளையாடினர். அதில் முத்து விட்டு கொடுத்தது பிரச்சினையில் முடிந்துவிட்டது.
முத்துவை வைத்து பாடம் புகட்டிய பிக்பாஸ்
இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை நிறுத்தியதோடு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் இனி கிடையாது என அறிவித்துவிட்டார். இதை எதிர்பார்க்காத முத்து கண்ணீர் விட்டு அழுதார்.
அதைத்தொடர்ந்து ஒட்டு மொத்த போட்டியாளர்களும் பிக் பாசிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் முத்து தொடர்ந்து சாரி சாரி என கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
உண்மையில் முத்து பவித்ராவுக்கு விட்டுக் கொடுத்தது அப்பட்டமாக தெரிந்தது. ஏற்கனவே தீபக் ரஞ்சித்துக்கு விட்டுக் கொடுப்பது போல் ஆடியதையும் நாம் பார்த்தோம்.
அதனாலேயே பிக் பாஸ் முத்துவை வைத்து மற்றவர்களுக்கு பாடம் புகட்டி இருக்கிறார். ஆனால் இதில் ஓர வஞ்சனை இருக்கிறது என முத்துவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சீசனில் இது போல் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் பிக் பாஸ் எதுவும் சொல்லவில்லை. முத்து என்றால் மட்டும் இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஏன் என தெரியவில்லை.
இதில் பலியாடாக மாறியது பவித்ரா தான். உண்மையில் இந்த வாரம் அவருடைய விளையாட்டு அற்புதமாக இருந்தது. கைக்கு எட்டிய வெற்றி முத்துவால் இப்போது பறிபோய்விட்டது.
இருந்தாலும் முத்து அழுவதை பார்த்து பவி அவருக்காக பிக்பாசிடம் பேசிய விதமும் அருமை. நாளுக்கு நாள் அவருடைய மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.
இதனால் டாப் 5 இறுதிப் போட்டியாளர்களில் இவரும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ இன்றைய சம்பவம் மற்ற போட்டியாளர்களுக்கு பயத்தை கொடுத்து இருக்கிறது என்பதுதான் உண்மை.