Biggboss-Vijay Tv: விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் மாபெரும் வெற்றி பெற்ற ஷோ என்றால் அது பிக்பாஸ் மட்டும் தான்.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் 100 நாட்களும் மற்ற சேனல் டிஆர்பி நிச்சயம் அடிவாங்கும். அதே போல் விஜய் டிவியின் டிஆர்பி கிடுகிடுவென உயரும்.
ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி இப்போது விஜய் சேதுபதியிடம் வந்துள்ளது. கடந்த எட்டாவது சீசனை அவர் வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார்.
விஜய் டிவியிலிருந்து கைமாறுகிறதா பிக்பாஸ் ஷோ.?
அதை அடுத்து 9வது சீசன் எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்த வருட அக்டோபர் மாதத்தில் அது கோலாகலமாக தொடங்க இருக்கிறது.
ஆனால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் பிக் பாஸ் சீசன் 8 மறுஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
அதற்கான ப்ரோமோ கூட வெளியாகிவிட்டது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். மேலும் அடுத்த சீசன் இனி கலர்ஸ் தமிழில் தான் ஒளிபரப்பாகும் என்ற தகவலும் கசிந்துள்ளது.
ஏனென்றால் ஜியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தற்போது இணைந்துள்ளது. அதனால் இப்படி ஒரு முடிவை சேனல் தரப்பு எடுத்திருக்கலாம் என்கின்றனர்.
ஆனால் விஜய் டிவி இதற்கு சம்மதிக்காது. நிச்சயம் பிக் பாஸ் புது சீசன் இதே சேனலில் தான் ஒளிபரப்பாகும் என நம்பத் தகுந்த தகவல்களும் கிடைத்துள்ளது. இருப்பினும் ரசிகர்களின் குழப்பம் இன்னும் தீரவில்லை.