புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எதிர்பாராத அதிர்ச்சியை கிளப்பிய பிக் பாஸ் எலிமினேஷன்.. என்ன இப்படி பண்ணிட்டீங்க ஆண்டவரே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. இதனால் பிக்பாஸ் டைட்டிலை பெறுவதற்காக போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர்.

அதில் இறுதிப் போட்டிக்கு செல்லும் டிக்கெட்டை பெறுவதற்கு இந்த வாரம் பல  டாஸ்க்குகள் வைக்கப்பட்டது. அந்த போட்டிகளில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வந்த அமீர் வெற்றி பெற்று முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து சனிக்கிழமையான இன்று கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்று பலரும் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர்.

அப்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பும் எலிமினேஷன் இன்று நடந்துள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் சஞ்சீவ் இன்று எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளார்.

இந்த செய்தி அவருடைய ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் கடைசி வைல்ட் கார்டு என்ட்ரி ஆக மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளே சென்றவர் சஞ்சீவ். நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான இவருக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை கொடுத்து வந்தனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இவரின் கண்ணியமான நடவடிக்கையும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு இவர் கண்டிப்பாக செல்வார் என்று பலரும் நினைத்திருந்தனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து சஞ்சீவ் வெளியேறி இருப்பது அவரது ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

Trending News