புதன்கிழமை, ஜனவரி 8, 2025

உச்சகட்ட கோபத்தில் நிரூப், ட்ரிகர் செய்தாரா பிரியங்கா.? இணையத்தில் பெருகும் ஆதரவு

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் நேற்று கேப்டன் போட்டிக்கான டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் கயிறு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த கயிற்றை யார் விடாமல் கடைசிவரை பிடித்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர் தான் பிக்பாஸ் வீட்டில் தலைவர்.

இதற்காக போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டனர். இரவு ஆரம்பித்த இந்தப் போட்டி மறுநாள் விடிந்த பின்னும் முடியாமல் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் தாமரை, நிரூப், அமீர் இவர்களைத் தவிர மற்ற அனைவரும் போட்டியில் இருந்து வெளியேறினார்கள்.

அதன்பிறகு இந்தப் போட்டி முடியாமல் தொடர்ந்த காரணத்தினால் அந்த மூவரும் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்காக அவர்கள் மூவரும் தாங்கள் ஏன் கேப்டனாக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர்.

அதில் நிரூப் எனக்கு எலிமினேஷன் பயம் இருக்கிறது அதனால் நான் வீட்டில் தலைவராக விரும்புகிறேன் மேலும் நான் தலைவர் ஆனால் வீட்டை நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்று கூறினார். இதற்கு பவானி மற்றும் பிரியங்கா தங்களுடைய கருத்தை தெரிவித்தனர்.

ஆனால் நிரூப், பிரியங்கா பேசுவது பிடிக்காமல் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிரியங்காவும் வழக்கம் போல தன்னுடைய கருத்தை கூறிக்கொண்டிருந்தார். அதில் எரிச்சலடைந்த நிரூப் கயிற்றை விட்டுவிட்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதற்கு சஞ்சீவ் மிகவும் ஆட்சேபம் தெரிவித்தார். எப்படி இருந்தாலும் நீ உன்னுடைய கருத்தில் நிலையாக இருக்க வேண்டும் அதை விட்டு வெளியேறுவது சரியானது அல்ல என்று தெளிவாக கூறினார். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காத நிரூப், பிரியங்காவால்தான் நான் வெளியேறினேன் என்று அவரையே குற்றம் சாட்டினார்.

மேலும் பிரியங்காவை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டினார்.  இதை பார்க்கும் போது பிரியங்காவின் கூற்று மிகவும் சரியானது. நிரூப் அடிக்கடி பயம் என்ற ஒரு உத்தியை பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறார். இது பல முறை நடந்ததால் அதற்காக பிரியங்கா, நிரூப்பை கண்டித்தார்.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிரூப் மிகவும் ஆக்ரோஷமாக பிரியங்காவுடன் சண்டையிட்டார். அதை தாங்க முடியாத பிரியங்கா ஒரு கட்டத்தில் அழுதுவிட்டார். நிரூப்பின் இந்த மோசமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்க பட்டு வருகிறது.

நிரூப் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதில் பிரியங்காவை வைத்து விளையாடுவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர் மேலும் போட்டி என்று வந்துவிட்டால் பிரியங்கா, நண்பர்கள், ஹவுஸ் மேட் என்று யாரையும் பார்ப்பதில்லை தன்னுடைய விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார்.

பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் இது மிகவும் முக்கியமானது. எந்த எமோஷனலுக்கும் இடம் அளிக்காமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்துபவர் தான் இறுதிப் போட்டியில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி வரும் பிரியங்காவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

Trending News