சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

காயம் பட்ட சிங்கத்தின் கர்ஜனை.. நிக்சனை பழி தீர்க்க காத்திருக்கும் வினுஷா

Biggboss 7: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பானது. ஆனால் அது மொத்தத்துக்கும் ஆப்பு வைக்கும் வகையில் இருக்கிறது இந்த சீசன். இதுவரை சேர்த்து வைத்த மொத்த பெயரையும் கமல் இதன் மூலமாக கெடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு இந்த சீசன் முழுவதும் வன்மத்தினால் மட்டுமே நிறைந்திருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் எலிமினேட் ஆகி சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர். இறுதி மேடைக்காக காத்திருக்கும் போட்டியாளர்களுக்கு இது ஒரு உற்சாகமாக இருக்கிறது.

அதன்படி தற்போது வினுஷா தேவி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறிய ஒரு விஷயம் தான் இது நம்ம லிஸ்டுலயே இல்லையே என யோசிக்க வைத்துள்ளது. அதாவது நிக்சன் அவரை உருவ கேலி செய்தது சோசியல் மீடியாவில் கண்டனத்திற்கு ஆளானது.

Also read: உன் சேஃப் கேம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.. சொம்பு தூக்கியின் முகத்திரையை கிழித்த மணி

பிக் பாஸ் வீட்டிலும் அது பெரும் பிரச்சனையாக வெடித்தது. அதை பற்றி தினேஷ், விஷ்ணு ஆகியோர் வினுஷாவிடம் கேட்கின்றனர். உடனே அவர் நிக்சன் என்னிடம் பேசினான். ஆனால் அவன் 70 கேமராவுக்கு முன்னால் தானே அப்படி சொன்னான்.

அதை 70 கேமரா முன்னாடி பேசுவோம் என அவர் கூறியிருக்கிறார். இதை பார்த்த ஆடியன்ஸ் இது வேற லெவல் ஆக இருக்கிறது என பாராட்டி வருகின்றனர். உண்மையில் வினுஷா இந்த விவகாரத்தில் மிகவும் காயப்பட்டது வெளிப்படையாகவே தெரிந்தது.

Also read: பப்ளிசிட்டி பைத்தியமான பீனிக்ஸ் பூர்ணிமா.. மீரா மிதுன் 2.0, 16 லட்சம் இதுக்கே சரியாயிடும் போல

ஆனால் அவருக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனாலேயே காயம் பட்ட சிங்கத்தின் கர்ஜனையாக தற்போது அவர் நிக்சனுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறார். அதற்காக ஆடியன்ஸும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

Trending News