வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மாயா செய்த கேவலமான வேலை.. மொத்த விஷத்தையும் கக்கி பிக்பாஸிடம் வாங்கிய குட்டு

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. ஆனாலும் வீட்டுக்குள் இன்னும் பத்து போட்டியாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் யார் இறுதி மேடையை அலங்கரிக்க போகிறார்கள் என்ற கருத்து கணிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது.

அதன்படி நேற்று சரவண விக்ரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தன்னைத்தானே டைட்டில் வின்னர் என நம்பிக்கையோடு கூறி வந்த இவருடைய வெளியேற்றம் பார்ப்பதற்கு கொஞ்சம் பாவமாக தான் இருந்தது. அதிலும் மாயா செய்த கேவலமான விஷயமும் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

அதாவது நேற்று விக்ரம் வெளியேறும்போது அனைவர் பற்றியும் நல்லவிதமாக பேசினார். ஆனால் மாயாவின் முகம் அவ்வளவு கடுமையாக இருந்தது. அதேபோல் விக்ரம் தேடி போய் அவரை கட்டிப்பிடித்து சாரி என்று சொன்ன போது கூட அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

Also read: என்னது மணி அண்ணனா.! பொம்பள புத்தியை காட்டி ரவீனா ஆடும் டபுள் கேம்

அதை பார்க்கும் போதே மொத்த விஷத்தையும் அவர் ஒரே நாளில் கொட்டி விட்டது வெளிப்படையாக தெரிந்தது. மேலும் கதவு திறந்திருந்த போது இவர் வெளியே எட்டிப் பார்த்து அங்கு இருப்பவர்களுடன் ஏதோ பேசுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்.

இதை பார்த்து கடுப்பான பிக்பாஸ் அவரை உள்ளே வர சொன்னதோடு மட்டுமல்லாமல் இது போல் இனிமேல் செய்யாதீர்கள் என்று எச்சரிக்கையும் கொடுத்தார். இப்படியாக நேற்றைய நாளில் மாயா நடந்து கொண்ட ஒவ்வொன்றும் இப்போது ஆடியன்ஸால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விக்ரம் வெளியேறும் போது மாயா மற்றொரு கேவலமான வேலையையும் செய்து இருக்கிறார். அதுதான் இப்போது பிக்பாஸ் ரசிகர்களின் கோபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இப்படி ஒரு போட்டியாளர்களை விஜய் டிவி தொடர்ந்து காப்பாற்றி வருவது இப்போது கண்டனங்களுக்கும் ஆளாகி இருக்கிறது. உண்மையில் இவர் டைட்டில் வின்னரானால் இது நிச்சயம் தவறான உதாரணமாக மாறிவிடும்.

Also read: ரவீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆண்டவர்.. திடீர் என்ட்ரியான உறவு, மணிக்கு சாதகமா, பாதகமா.?

Trending News