திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

இவரா, அவரா வெளியேறப் போவது யாரு.? கடைசி நேரம் வரை ஆட்டம் காட்டும் பிக்பாஸ்

Biggboss 7 Eviction: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வார இறுதியில் களை கட்டும். ஆண்டவரிடமிருந்து யாருக்கு அர்ச்சனை விழ போகிறது என்பதை ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.

அதன்படி இந்த வார நாமினேஷனில் விசித்ரா, மணி, ரவீனா, பூர்ணிமா, பிராவோ, அக்ஷயா, கானா பாலா, விக்ரம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதில் பிக்பாஸ் வீட்டின் செட் பிராப்பர்ட்டியாக இருக்கும் விக்ரம் தான் வெளியேறுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார் போல் தற்போதைய ஓட்டு நிலவரத்தின்படி கடைசி இரண்டு இடத்தில் கானா பாலா, விக்ரம் ஆகியோர் இருக்கின்றனர். இருவருக்கும் மிகக் குறைவான ஓட்டு வித்தியாசம் தான் இருக்கிறது. அதனாலயே இவர்களில் யார் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Also read: ஆண்டவரையே கதற விட்ட பசுக்கள் கூட்டம்.. ஜிங்ஜாங் போடும் காளைகள், சுவாரசியமாகும் சீசன் 7

ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட் கொடுக்காமல் சுற்றிவரும் நபர்கள் தான் வாராவாரம் வெளியேறுவார்கள். அதில் அக்ஷயா, கானா பாலா, விக்ரம் மூவரும் அப்படி ஒரு நிலையில் தான் இருக்கின்றனர். இதில் எதிர்பாராத விதமாக அக்ஷயா விக்ரம் ஜோடி ட்ரோல் மெட்டீரியலாக மாறி இருக்கின்றனர்.

பிக்பாசே கூட விக்ரமை அவ்வப்போது பங்கமாக கலாய்த்து வருகிறார். அப்படி இருக்கும் போது அவர் இப்போதைக்கு வெளியேறும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது. அதனாலேயே கானா பாலா இந்த வாரம் எவிக்ட் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எதிர்பாராததை எதிர்பார்ப்பது தானே பிக் பாஸ்.

Also read: விஜய் டிவி காலில் விழுந்து ஹோஸ்ட் ஆன கமல்.. எக்ஸ்பயரி முடிஞ்ச தாத்தா என அசிங்கப்படுத்திய பிக்பாஸ் பெண் சைக்கோ

Trending News