ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

சாதனையிலும், சோதனையில் முடிந்த ஒரு நாள் போட்டிகள்.. ஒரு அணி அடித்த அதிகபட்சம் மற்றும் குறைந்த ரன்கள்!

ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 200 ரன்கள் எடுப்பதே பெரிய விஷயமாக இருந்தது. பின் நாளடைவில் 250 முதல் 300 ரன்கள் எடுக்க தொடங்கினார்கள். அதன்பின் தற்போது 350, 450 என இமாலய இலக்கை 50 ஓவர்களில் அடிக்கின்றனர்.

அப்படி ஒரு நாள் போட்டிகளில் சர்வதேச அணிகள் அடித்த அதிக ரன்களையும், அதே சமயம் மிக குறைந்த ரன்களையும் பெற்ற ஆட்டத்தை இதில் பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாஅதிகபட்சம் 434/4 : 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு போட்டியில் 434 ரன்களை குவித்தது. அதிரடி ஆட்டம் ஆடிய ரிக்கி பாண்டிங் 164 ரன்கள் குவித்தார். அதன்பின் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி எளிதில் வீழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர்க ஹெர்செல் கிப்ஸ் ருத்ரதாண்டவம் ஆடி 175 ரன்களை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

Ricky-Cinemapettai.jpg
Ricky-Cinemapettai.jpg

குறைந்தபட்சம் 70/10:  ஆஸ்திரேலிய அணி ஒரு முறை இங்கிலாந்துக்கு எதிராகவும், மறுமுறை நியூசிலாந்துக்கு எதிராகவும் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே ஆஸ்திரேலிய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

இங்கிலாந்து அதிகபட்சம் 481/6: 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்தது. ஜானி பேர்ஸ்டோ மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் சதம் அடித்தனர். பின் ஆஸ்திரேலிய அணி 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

England-Highest-Odi-Cinemapettai.jpg
England-Highest-Odi-Cinemapettai.jpg

குறைந்தபட்சம் 81/10: 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் 208 ரன்கள் அடிக்க முடியாமல், இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கிளன் மெக்ராத், வார்னே மற்றும் கில்லஸ்பி பந்துவீச்சில் அசத்தினர்.

Shewag-200-Cinemapettai.jpg
Shewag-200-Cinemapettai.jpg

இந்தியாவின் அதிக பட்சம் 418/5: 2011ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சேவாக் இரட்டை சதம் அடித்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி தனது ஒருநாள் போட்டியில் 418 என்ற இமாலய இலக்கை பதிவு செய்தது.

India-54-Cinemapettai.jpg
India-54-Cinemapettai.jpg

குறைந்தபட்சம் 54/10: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 54 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.சமிந்தா வாஸ் மற்றும் முரளிதரன் பந்துவீச்சில் அசத்தினர்.

நியூசிலாந்தின் அதிகபட்சம் 402/8: பிரண்டன் மெக்கல்லம் அதிரடி ஆட்டத்தால் 2008ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் நியூசிலாந்து அணி தனது அதிகபட்ச இலக்கை 402 என பதிவு செய்து அசத்தல் வெற்றி பெற்றது.

குறைந்தபட்சம் 64/10: ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் 64 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. வாசிம் அக்ரம், இம்ரான் கான், அப்துல் காதர் மூவரும் பந்துவீச்சில் அசத்தினர்.

Nz-Lowest-cinemapettai.jpg
Nz-Lowest-cinemapettai.jpg

இலங்கை அதிகபட்சம் 443/9: நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இலங்கை அணியின் ஜெயசூர்யா மற்றும் தில்சன் இருவரும் சதமடித்து இலங்கை அணி 443 ரன்கள் எடுக்க பெரிதும் உதவினர்.

குறைந்தபட்சம் 43/10: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் 306 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை அணி வெறும் 20 ஓவர்களில், 43 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

Srilanka-lowestCinemapettai.jpg
Srilanka-lowestCinemapettai.jpg

பாகிஸ்தான் அதிகபட்சம் 399/10: 2018 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணியின் பக்தர் ஜமான் இரட்டை சதம் அடித்தார். அதன்மூலம் பாகிஸ்தான் அணி தனது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை பதிவு செய்தது.

Pakistan-Cinemapettai.jpg
Pakistan-Cinemapettai.jpg

குறைந்தபட்சம் 43/10: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 43 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பேட்டர்சன், கோர்ட்னி வால்ஷ் மற்றும் ஆண்டர்சன் கம்மின்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு தாங்கமுடியாமல் தங்களது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 43 ரன்கள் மட்டுமே குவித்தது.

தென்னாப்பிரிக்கா அதிகபட்சம் 439/2: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் தனது அதிவேக சதத்தை, ஒருநாள் போட்டிகளில் பதிவு செய்தார். இவரின் அதிரடி ஆட்டத்தினால் 439 என்ற இமாலய இலக்கை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா அணி.

SA-Lowest-Cinemapettai.jpg
SA-Lowest-Cinemapettai.jpg

குறைந்தபட்சம் 69/10: 1993 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் 172 ரன்கள் எடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. இதுவே தென் ஆப்பிரிக்க அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

 

மேற்கிந்தியத் தீவுகள் அதிகபட்சம் 389/9: 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 418 ரன்கள் குவித்தது. இலக்கைத் துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் 389 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 14 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கேல் 162 ரன்கள் குவித்தார்.

West-indies-Cinemapettai.jpg
West-indies-Cinemapettai.jpg

 

குறைந்தபட்சம் 54/10: தென்ஆப்பிரிக்க அணியின் லான்ஸ் குளூஸ்னர் மற்றும் மக்காய நிட்டினி பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 206 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -spot_img

Trending News