ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய்க்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி.. ஒரே டயலாக்கை நம்பி ஏமாந்த தளபதி

90களில் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகுதான் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்ட தளபதி விஜய், அதன் பிறகு தமிழ் திரையுலகின் அடையாளமாகவே மாறினார். தற்போது உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை தன்வசப்படுத்திய விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் ஒரே டயலாக்கை நம்பி சுறாவுக்கு இறையான விஜய்யைப் பற்றி 13 வருடங்களுக்குப் பிறகு சீக்ரெட்டை உடைத்து இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான மனோபாலா. 2007 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி படத்திற்குப் பிறகு தொடர்ந்து தோல்வி படங்களில் கொடுத்து வந்த விஜய் தனது 50-வது படமான சுறா படத்தில் நடித்தார்.

Also Read: சாப்பாடும் கொடுக்காமல், சம்பளமும்கொடுக்காமல் அசிங்கப்படுத்திய படக்குழு.. அஜித், விஜய் பட வில்லனுக்கு நடந்த கொடூரம்

இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடித்திருப்பார். படத்தை எஸ்பி ராஜ்குமார் இயக்கினார். ஏற்கனவே இவர் ஒன்ஸ்மோர், என் புருஷன் குழந்தை மாதிரி, பொன் மனம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். அதன் பிறகு விஜய்யின் 50-வது படத்தை இயக்குவதற்கான வாய்ப்பையும் பெற்றார்.

இந்தப் படம் தான் விஜய்யின் நடிப்பில் வெளியான படுமோசமான தோல்வி படம். விஜய் நடிக்கும் அளவுக்கு இந்த படத்தின் கதை இல்லை. இந்த படத்திற்கு எப்படி விஜய் ஒத்துக்கொண்டார் என தளபதி ரசிகர்கள் பலருக்கும் கேள்வி எழும்பியது.

Also Read: மூன்று ஹீரோக்களுக்காக பின்னணி பாடல் பாடிய விஜய்.. 23 வருடத்திற்கு முன் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல்

அப்போது விஜய்யிடம் ஏன் இந்த படத்தில் நடித்தீர்கள்? என மனோபாலா நேருக்கு நேராகவே கேட்டிருக்கிறார். அதற்கு விஜய், இயக்குனர் என்னிடம் கதை சொல்லும் முன் ஒரு டயலாக் கூறினார். ஏன்டா அவனை தூக்கி தண்ணில போட்டீங்க. அவன் சுறாடா! என்று சொன்னவுடன், எனக்கு இந்த படத்தில நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

அதற்கு மனோபாலா அது கதை இல்ல தம்பி, டயலாக்! இப்படி டயலாக்கை நம்பி ஏமாந்து போயிட்டியே! என சிரித்திருக்கிறார். தற்போது வரை அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என விஜய் பேசி வருகிறாராம். ‘ஒரு மாட்டுக்கு ஒரு சூடு’ என்பது போல், அதன் பிறகு விஜய் எந்த படத்தின் கதையையும் முழுசா கேட்காமல் படத்திற்கு ஓகே சொல்வதில்லையாம். அந்த அளவிற்கு சுறா நல்லா பாடம் புகட்டிருச்சு.

Also Read: 300 கோடி வசூல் வந்தும் ஒரு பிரயோஜனம் இல்லை.. வாரிசால் புலம்பி தவிக்கும் தில் ராஜு

Trending News