கே ஜி எஃப் 2: தெலுங்கு படமான இது நடிகர் யாஸ் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கொடுத்த படம். இந்த படத்திற்கு பின் அனைத்து மொழிகளிலும் அவர்களுக்கு ரசிகர் கூட்டம் பெருகியது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் இதன் இரண்டாம் பாகம் அமேசான் தளத்தில் 300 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
ஜெய்லர்: நெல்சன் ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படமாக இதை கொடுத்தார். அனிருத் இசையில் பேக்ரவுண்ட் மியூசிக் இதற்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. இந்த படத்தை அமேசான் பிரைம் 100 கோடிக்கு வாங்கியது. ரஜினி படத்தால் கூட கே ஜி எஃப் 2 வசூலை முறியடிக்க வில்லை
ஜவான்: இந்த படத்தால் இன்று பாலிவுட் வரை கொடி கட்டி பறக்கிறார் அட்லீ. 1000 கோடிகள் வசூல் செய்த இந்த படத்தை அமேசான் 200 கோடி விலை கொடுத்து வாங்கியது. ஓடிடியிலும் நல்ல வசூலை பெற்று கொடுத்தது.
சலார்: நெட்பிலிக்ஸ் ஒடிடி தளம் இதை 160 கோடிகள் கொடுத்து வாங்கியது. பிரபாஸ் படங்களில் இதுதான் அதிக விலைக்கு வாங்கப்பட்ட படம். இதற்கு முன்னர் பாகுபலி சுமார் 60 கோடிகள் வரை வியாபாரம் ஆகியுள்ளது.
லட்சுமி: ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த படம் காஞ்சனா, இதன் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி போன்றவர்கள் நடித்தனர். இதனை அமேசான் 120 கோடிகளுக்கு வாங்கியது. ஆனால் இந்த படம் அங்கே வசூல் செய்ய தவறியது.