சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிகில் படத்திற்கு முன்பே அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ள அம்ரிதா ஐயர்.. வைரலாகும் புகைப்படம்

கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிகில். விஜய்யின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக பிகில் மாறியது. 300 கோடி வசூல் செய்ததாக வெளியான செய்தியால் பல சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய்க்கு ஜோடியாக நீண்ட நாள் கழித்து நயன்தாரா பிகில் படத்தில் நடித்திருந்தார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த பிகில் படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதேபோல் கால்பந்து வீராங்கனைகளாக நடித்த இளம் நாயகிகள் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதிலும் குறிப்பாக அமிர்தா ஐயர் என்ற நடிகை மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை பெற்றுவிட்டார்.

ஆனால் பிகில் படத்திற்கு முன்பே அம்ரிதா ஐயர் தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் ஒரு சின்ன காட்சியில் நடித்திருப்பார். அதுவே பிகில் படத்திற்கு பிறகுதான் நிறைய பேரால் கவனிக்கப்பட்டது.

தற்போது அதேபோல் 2015ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் கூட அமிர்தா ஐயர் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது திடீரென இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

amritha-iyer-yennai-arindhaal-cinemapettai
amritha-iyer-yennai-arindhaal-cinemapettai

பிகில் படத்தில் தளபதி விஜய்யுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது போல தல அஜித்துடன் அம்ரிதாவுக்கு நெருங்கி பழக வாய்ப்பு கிடைக்கவில்லை போல. இதனாலேயே பல பேட்டிகளில் அஜித்துடன் நடித்ததை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News