தாவணிக்கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மயில்சாமி. தனது குணச்சித்திர நடிப்பால் பல ரசிகர்களை நீங்கா இடம் பிடித்தார்.
முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தவர், கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்து தற்போதும் நடித்து வருகிறார் மயில்சாமி.
அரசியல் ஆசை யாரை விட்டது சமீபத்தில் நடந்த தேர்தலில் நின்று தோற்றுப் போனார். ஆனால் சமூக அக்கறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எந்த ஒரு சமூகப் பிரச்சினை ஆனாலும் முன்னால் நின்று குரல் கொடுப்பார்.
இவர் நடிப்பில் வெளிவந்த தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்கள் மறக்க முடியாது என்றே கூறலாம்.
![mayil-sami-2](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/06/mayil-sami-2.jpg)
சினிமா பிரபலங்கள் தனக்கு பிடித்த கதாபாத்திரத்தில் புகைப்படம் வெளியிடுவது வாடிக்கைதான். அந்த வகையில் பிகில் பட ராயப்பன் தோற்றத்தில் மயில்சாமி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
![mayil-sami-1](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/06/mayil-sami-1.jpg)