விடாமுயற்சி படம் இன்னும் இரு தினங்களில் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் கடைசியாக அந்த படத்திற்கு ஒரு செக் இருக்கிறது. அதை சரி செய்தால் மட்டும் தான் படம் குறிப்பிட்ட நேரத்திற்கு ரிலீசாகும் என்று தெரிகிறது.
1997இல் வெளிவந்த பிரேக் டவுன் பட தழுவல் என்பதால் காப்பி ரைட்ஸ் பிரச்சனையால் அந்த பட நிறுவனமான பெரமண்ட் பிக்சர்ஸ் பஞ்சாயத்தை கூட்டி 100 கோடிகள் வரை நஷ்ட ஈடு கேட்டது. அதன் ஒரு பகுதியாக சில தொகைகள் செட்டில்மெண்ட் நடந்துள்ளது.
இப்பொழுது கடைசியாக ஒரு 13 கோடி ரூபாய் அந்த நிறுவனத்திற்கு பாக்கி வைத்து விட்டார்களாம் லைகா. இந்த தொகையை கொடுத்தால் மட்டுமே படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும். அதுவரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருக்க வேண்டும்.
பட தயாரிப்புகளில் திமிங்கலம் போல் செயல்பட்டு வரும் லைகாவிற்கு இப்படி ஒரு நிலைமையா என்று யோசித்துப் பார்த்தால், அவர்களது செயல்பாடுகள் இதைவிட மோசமாக உள்ளது. 13 கோடி ரூபாய் மட்டுமல்லாது அவர்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஆட்களுக்கும் 4 மாதமாக சம்பளம் கொடுக்கவில்லையாம்.
இன்றும் நாளையும் என விடாமுயற்சிப்பட ரிலீசுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் மொத்தத் தொகையையும் கொடுத்து என்ஓசி வாங்கினால் மட்டுமே படம் ரிலீஸ் ஆகும். இல்லையென்றால் ஏதாவது பிரச்சினை வந்தால் அதையும் சமாளிக்க வேண்டும். இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்து வருகிறது லைகா.