சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரஜினியிடம் உதவி கேட்கும் பிஜிலி.. அசிங்கமாக திட்டிய வலைப்பேச்சு அந்தணன்

Rajini:நகைச்சுவை நடிகரான பிஜிலி ரமேஷின் இன்டர்வியூ வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் பிராங்க் வீடியோ மூலம் பிரபலமானவர்தான் இந்த பிஜிலி.

இதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கோமாளி, பொன்மகள் வந்தால் போன்ற சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதிகமாக ரஜினியின் கெட்டப் மற்றும் அவரது வசனங்களை பிஜிலி ரமேஷ் பேசிக் கொண்டிருப்பார். இந்நிலையில் ஓவராக குடித்ததால் அவருக்கு இப்போது உடல் நலம் மோசமாகிவிட்டது. இதனால் வயிறு வீங்கி பார்க்கவே பரிதாபமான நிலையில் இருக்கிறார்.

பிஜிலி ரமேஷ் கேட்ட உதவிக்கு அந்தணன் பேச்சு

இதனால் ஊடகங்கள் வாயிலாக பிஜிலி ரமேஷ் மற்றும் அவரது மனைவி சினிமா பிரபலங்களிடம் உதவி கேட்டு வருகிறார்கள். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக தனது கணவருக்கு உதவ வேண்டும் என பிஜிலியின் மனைவி கேட்டிருந்தார்.

இதைப் பார்த்து ஆதங்கப்பட்ட வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதாவது அம்பானி வீட்டு கல்யாணத்திலேயே பணத்திற்காக ரஜினி ஆடினார் என்று விமர்சனம் இப்போது அவர் மீது வைக்கப்படுகிறது.

அவர் இவ்வாறு சொத்து சேர்க்க காரணம் அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான். வெயில், மழை என்று பார்க்காமல் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். சும்மா இல்லாமல் குடித்து தனது உடம்பை கெடுத்துக் கொண்டு இப்போது ரஜினி உதவ வேண்டும் என்பது எவ்வாறு நியாயம்.

மேலும் பிஜிலி ரமேஷின் வீடியோ கீழே பார்த்தால் 90% மக்கள் அவரை திட்டி தான் கமெண்ட் செய்திருக்கிறார்கள். இப்போது குடிப்பழக்கம் மோசமாகி வரும் நிலையில் வீட்டிற்க்கே டோர் டெலிவரி செய்யும் அளவுக்கு மது விற்பனைக்காக அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாடு எதை நோக்கி செல்கிறது என்பதே தெரியவில்லை என தனது ஆதங்கத்தை அந்தணன் வெளிப்படுத்தி உள்ளார்.

ரஜினியை விமர்சித்த பிரபலங்கள்

Trending News