புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தல அஜித்துடன் பில்லா 3 எப்போது..? டைரக்டர் விஷ்ணுவர்தன் ஓபன் டாக்.!

தல அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணு வர்தன். தற்போது விஷ்னுவர்தன் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த கேப்டன் விக்கிரம் பட்ரா என்பவருடைய வாழ்க்கை வரலாறை Shershaah என்ற பெயரில் இந்தியில் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஒரு ராணுவ வீரனின் மரணத்திற்குப் பின், அவரது மறைவு, குடும்பம், நண்பர்களை எப்படி பாதிக்கிறது என்பதை சொல்லும் விதமாக படம் அமைந்துள்ளது. இந்த படம் பற்றி யூடியூப் சேனல் ஒன்றிற்கு விஷ்ணுவர்தன் பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் பில்லா 3 வருமா என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் “இதுவரை எந்த திட்டமும் அப்படி இல்லை, பில்லா முதல் பாகம் கூட எவ்வித திட்டமும் இல்லாமலே தொடங்கியது. சில படங்களை மீண்டும் எடுக்காமல் இருப்பதே அதன் தனித்தன்மையை தக்கவைக்கும். பில்லா படமும் அப்படியே இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து ‘பில்லா 2’ படத்தை எடுப்பதாக இருந்தது. அதற்காக அப்போது நாளிதழ்களில் விளம்பரம் கூட வெளியானது. ஆனால், அதே நேரத்தில் விஷ்ணுவர்தன் தெலுங்கில் பவன் கல்யானை வைத்து ஒரு படம் எடுக்க இருந்ததால், பில்லா 2 படத்தை அவரால் இயக்க முடியவில்லை.

billa-ajith-cinemapettai
billa-ajith-cinemapettai

சில ஆண்டுகளுக்கு முன்னதாக ராஜ ராஜ சோழன் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து இயக்கப்போவதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால், அதுபற்றிய எந்த அறிவிப்பும் இன்று வரை வெளியாகவில்லை.

Trending News