செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

முதல்வருக்கு பயோபிக் ரெடி.. தலைவி பாணியில் தனுஷ் பட நடிகருக்கு வலை வீசிய உதயநிதி

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளாராக அறிமுகமாகி பின்னர் நடிகர்,அரசியல்வாதியாக உருவான உதயநிதி ஸ்டாலினுக்கு, அண்மையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. இதனிடையே அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ள உதயநிதி, சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை முழுக்குப் போட்டுவிட்டார்.

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின், இப்படத்தின் ரிலீசுக்கு பின்பு முழுநேரம் அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும் செயல்பட உள்ளார். இருந்தாலும் இவரது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மூலமாக திரைப்படங்களை திரையரங்குகளில் விநியோகம் செய்யும் வேலையையும், படங்களை தயாரிப்பதிலும் முழுக்குபோடவில்லை.

Also Read: உதயநிதியை தலையில் துண்டை போட வைத்த 5 படங்கள்.. நயன்தாரா, நண்பனை நம்பி மூக்குடைந்த சோகம்

இதனிடையே தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடந்து வந்த வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் உதயநிதி ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார். மு க ஸ்டாலின் தனது வாலிப காலத்தில் இருந்து கலைஞர் கருணாநிதியுடன் இணைத்து பல தேர்தல்களில் போட்டியிட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து தமிழக முதல்வரானார்.

இந்நிலையில் அவரின் சாதனைகளையும், இன்னல்களையும் படமாக எடுக்க இயக்குனர் சீனு ராமசாமி கமிட்டாகியுள்ளார். மேலும் இப்படத்தை தயாரித்து ,தனது தந்தை கதாபாத்திரத்தில் தானே நடிக்கவும் உதயநிதி கம்மிட்டனார்.  ஆனால் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட நிலையில், இந்த கதாபாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் பயோபிக் படத்தில் நடித்த நடிகரை அணுகியுள்ளார் உதயநிதி.

Also Read: கமலை நிராகரித்த உதயநிதி.. பிரபல நடிகரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஆண்டவர்

இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு பேன் இந்தியா படமாக வெளியான தலைவி படத்தில், கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பர். மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆரின் விசுவாசியான ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பார்.

இதனிடையே சமுத்திரகணியை முதல்வரின் பயோபிக்கில் ஸ்டாலின் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாக்கியுள்ளார் உதயநிதி. கூடிய விரைவில் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாக உள்ள நிலையில், எம்.ஜி.ஆருக்கு விசுவாசியாக நடித்துவிட்டு எப்படி சமுத்திரக்கனி, ஸ்டாலின் போல் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Also Read: உதயநிதியால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வந்த சிக்கல்.. எதுவுமே கிடைக்காததால் எடுத்த விபரீத முடிவு

Trending News