சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே இவரா நாட்ட திருத்த போறாரு..? விஜய்யை வறுத்தெடுத்த பிரபலம்!

Bismi criticize Vijay before he started his political activities: தமிழக வரலாற்றில் எழுதப்படாத விதி என்பது சினிமாவில் கொடி கட்டி பறந்த முன்னணி  கலைஞர்களின் அடுத்த இலக்கு அரசியல் என்பதே. இதற்கு உதாரணமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆரை மேற்கோள் காட்டி இவரைப் போலவே நாங்களும் மக்களுக்கு சேவை செய்யப் போகிறோம் என்று  ஆர்வத்துடன் அரசியலுக்கு வருகின்றனர். 

எம்ஜிஆர் சினிமா என்பதை ஊடகமாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்தார் என்பது ஆர்வக்கோளாறுகள் பலரும் அறியாத ஒன்று. எதிரணியில் இருந்த கலைஞர் கருணாநிதியே தன் சுய சரிதையில் எம்ஜிஆரை பற்றி எழுதும்போது எம்ஜிஆரின் எளிமையையும், கதர் உடையில் அவர் காட்சியளித்த விதத்தையும், கொடைத்தன்மை பற்றியும் புகழ்ந்திருப்பார். 

கருணாநிதி வாக்கு வேட்டைக்காக எம்ஜிஆரை கோமாளி போல் சித்தரித்ததையும் கண்டு கொள்ளாத எம்ஜிஆர் தன் எதிராளியான கலைஞரை தன் கட்சியினர் மரியாதை குறைவாக ஒரு வார்த்தை கூட பேசவிட மாட்டாராம் உடனே கண்டிப்பாராம். அப்பேர்ப்பட்டகட்சி  வழியில் வந்த ஒருவர் இன்று கலைத்துறையில் இருக்கும் முன்னணி நடிகையான திரிஷாவை சொல்வதற்கு கூசுமளவு வசைப்பாடி விட்டுப் போனது கண்டனத்திற்குரிய ஒன்று. 

Also read: ரீ ரிலீஸ்ல் ரெண்டு வருடமா ஓடும் படம்.. மொத்த காதலையும் வெளிக்காட்டி கிரங்கடித்த திரிஷா

அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர் கூவத்தூர் சர்ச்சையில் தேவையில்லாமல்  திரிஷாவை இழுத்து அவரது நட்பெயருக்கு கலங்கம் விளைவித்து சுயலாபம் தேடிக் கொண்டார். இதற்கு நடிகர்கள் சிலரும் நடிகர் சங்கமும் சம்பவத்திற்கு இரண்டு நாள் கழித்து தனது கண்டனத்தை பதிவு செய்தது. 

நானும் ரவுடிதான் என்று வடிவேலு கூறுவது போல் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழக வெற்றி கழகம் என அறிவித்து நானும் அரசியல்வாதி தான் என்று வான்டட் ஆக மக்களிடம் தன்னைக் கொண்டு சேர்த்துள்ளார் இளைய தளபதி விஜய். மக்களுக்கு உதவித்தொகை கொடுப்பது பரிசுத்தொகை கொடுப்பது என்று செய்வதெல்லாம் சரிதான்.. 

மக்களுக்காக  உரிமைக்குரல் கொடுப்பது எப்போது? அரசியல்வாதியாக இல்லாமல் போனாலும் கூட தன்னுடன் பல படங்களில் நடித்திருக்கும் சக  நடிகைக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு குரல் கொடுக்காமல் போவது எதற்காக. இன்று சக நடிகைக்கு குரல் கொடுக்காதவர் மக்கள் பிரச்சனைக்கு எவ்வாறு குரல் கொடுப்பார் என்று சாமானியன் முதல் சர்காரில் உள்ள பிரதிநிதிகள் வரை கேள்வி எழுப்பி வருகின்றனர். எம்ஜிஆர் போல முதல்வராகும் கனவு சரிதான்! இன்னும் வாயை திறக்கலைன்னா எப்படி? என்று சினிமா ஆர்வலர் பிஸ்மி பேட்டி ஒன்றில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

Also read: மிட்நைட்டில் ரகசிய வேலை பார்க்கும் விஜய்.. அரசியல் மாநாட்டுக்கு தளபதி குறி வைக்கும் 3 இடங்கள்

Trending News