Ajith Vijay: தமிழக அரசியலில் எப்படியாவது நிலைத்து நிற்க வேண்டும் என்று பிஜேபி கட்சி பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிராக ஸ்ட்ராங்கான ஒரு பிரபலம் கிடைத்தால் அதன் மூலம் அந்த கட்சியை தமிழ்நாட்டில் வளர்த்து விட வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய நோக்கம். ஆனால் துரதிஷ்டவசமாக பிஜேபி கட்சிக்கு அப்படி ஒரு ஆள் இன்று வரை சிக்க வில்லை.
நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்தே அவருடைய குறிக்கோளாக இருந்தது ரஜினியை தமிழக அரசியலில் பிஜேபிக்கு ஆதரவாக களம் இறக்க வேண்டும் என்று தான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த சமயத்தில் ரஜினியை எப்படியாவது உள்ளே கொண்டு வந்து விட வேண்டும் என பிஜேபி கட்சி முயற்சி செய்தது. ரஜினியும் தான் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவிப்பு முதற்கொண்டு வெளியிட்டார்.
ஆனால் தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி ரஜினி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அரசியலில் களமிறங்க போகிறேன் என அறிவித்திருந்த ரஜினி தன்னுடைய கொள்கையாக ஆன்மீக அரசியலை சொன்னவுடன் அவருக்கு தமிழகம் முழுக்க பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அவர் அரசியலில் பின்வாங்க இது கூட முக்கிய காரணம்.
Also Read:விஜய் வைத்து பழிக்கு பழி சம்பவம் செய்ய போகும் ரஜினி.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆட்டம்
அடுத்து என்ன செய்யலாம் என பிஜேபி கட்சி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனியும் தாமதித்தால் தமிழ்நாட்டில் பிஜேபி என்ற கட்சி இல்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்து அந்த கட்சி வலை விரித்து இருப்பது நடிகர் அஜித்குமாருக்கு தான். முக்கிய பிரபலத்தை வைத்து அஜித்துக்கு வலை வீச தொடங்கி இருக்கிறார்கள்.
பிஜேபியின் கருப்பு ஆடு
தமிழ்நாட்டில் ரொம்பவும் தைரியமாக பிஜேபி கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருபவர்கள் ஒரு சிலர் தான். அதில் முக்கியமான ஒருவர் தான் பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே. இவரை வைத்து தான் அஜித்குமாரை பிஜேபி கட்சியில் சேர்க்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இவர் அஜித்துடன் இணைந்து நடித்த போது இருவருக்குள்ளும் நல்ல நட்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஜினி அரசியலுக்கு வர இருந்த போது பாண்டே தான் அவருக்கு முழுக்க முழுக்க ஆலோசனை கொடுத்து வந்தது. ரஜினியை விட்ட மாதிரி அஜித்தை அவர் விடுவதாய் இல்லை. அஜித்திற்கு மூளை சலவை செய்ய அவர் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். விஜய் மற்றும் அஜித் இருவருக்குமிடையே தொழில் போட்டி இருப்பதால் அரசியலிலும் மோத அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.