ஜீவாவின் சமீபத்தில் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மற்றும் பிளாக் படத்தின் 4வது நால் வசூல் நிலவரத்தைப் பற்றி இதில் பார்க்கலாம்.
ஜீவாவின் சமீபத்திய படங்கள், பாக்ஸ் ஆபீஸ் வசூல்!
ராம், கற்றது தமிழ், கோ, நண்பன் என வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் ஜீவா. ஜீவாவின் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காஃபி வித் காதல் படத்தை சுந்தர் சி இயக்கினார். இப்படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர், சம்யுக்தா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்த நிலையில், இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி 2 கோடி ரூபாய் வசூல் குவித்தது.
அதன்பின், சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கி, ஜீவா காஷ்மீர் பரதேஷி, பிரக்யா நாக்ரா ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் வரலாறு முக்கியம். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வரலாறு முக்கியம் படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.1.11 கோடி மட்டுமே வசூலித்து தோல்விப்படமாக அமைந்தது.
இதையடுத்து, மஹி ராகவ் இயக்கத்தில், ஜீவா, மம்முட்டி ஆகியோர் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த பிப்ரவரி 2024 அன்று வெளியான படம் யாத்ரா 2. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியில் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இதில் ஜெகன் மோகனாக ஜீவா நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் 5.60 கோடி ரூபாய் வசூல் குவித்தது.
பிளாக் படம் அதன் வசூல் நிலவரம்!
அதன்பின்னர், ஜீவா, ப்வானி சங்கர் நடிப்பில் பாலசுப்பிரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிளேக். இப்படம் கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டரில் ரிலீஸானது. இப்படம் 2013 ஆம் ஆண்டு வெலியான கோஹரன்ஸ் படத்தின் ரீமெக் ஆகும்.
ஒரு வீட்டில் நடக்கும் மர்ம நிகழ்வுகள், அங்கு செல்லும் ஜீவா, பிரியா பவானி சங்கர் மாதிரியே சில உருவங்கள் இருக்கின்றனர். அங்கு மாட்டிக் கொள்ளும் அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை. சயின்ஸ் பிக்சர் ஜர்னரில் உருவாகியுள்ள இப்படம் தமிழுக்கு ஏற்றபடி படக்குழு மாற்றி, அட்டகாசமாக பாடமாக்கியுள்ளது.
வேட்டையன் படத்தோடு மோதிய பிளேக்
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்துடன் ரிலீஸான பிளேக் படம் நாட்கள் முடிவில் ரூ.4.2 கோடி வரை வசூலித்துள்ளது. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதால் இனி வரும் நாட்களிலும் விடுமுறையிலும் இப்படத்தின் வசூல் மேலும் கூடலாம் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
வேட்டையன் படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், 5 வது நாளில் வெறும் 5 கோடி தான் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போட்டியில் ரஜினியின் வேட்டையன் படம் வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியான ஜீவாவின் படங்கள் அதிக வரவேற்பை பெறாத நிலையில் பிளேக் படம் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் அவரது நடிப்பு, ஆக்சன் எல்லாம் அட்டகாசமாக, மற்ற படங்களைக் காட்டிலும் ஜீவா இதில் நன்றாக நடித்திருக்கிறார் என ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
ரஜினியின் வேட்டையன் படம் லைகாவின் விளம்பரத்தை தாண்டி, ஜீவாவின் பிளாக் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.