தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சமீப காலமாக படங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இதற்கு காரணம் அவர் தவற விட்ட படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள். விஜய் படங்கள் எப்போதுமே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும். அந்தவகையில் பீஸ்ட் படத்திற்கும் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பும், வரவேற்ப்பை பெற்றுள்ளது.
உன்னை நினைத்து: விக்ரமன் இயக்கத்தில் 2002ல் வெளியான திரைப்படம் உன்னை நினைத்து. இப்படத்தில் முதலில் தளபதி விஜய் நடித்து இருந்தார். பிறகு, ஒரு பாடலுக்காக இரண்டு நாள் சூட்டிங் போனது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்திலிருந்து விஜய் விலகினார். பிறகு இப்படத்தில் சூர்யா நடித்து, படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படம் சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனையாகும், ஹீரோ என்ற அங்கீகாரத்தை கொடுத்தது.
முதல்வன்: ஷங்கர் இயக்கத்தில், அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் முதல்வன். இப்படத்தின் கதையை சங்கர் முதலில் ரஜினியிடம் கூறினார். அவர் மறுத்த காரணத்தினால், பின்பு கமலஹாசனிடம் சொல்ல அவரும் இப்படத்தை மறுத்துவிட்டார். ரஜினி, கமல் இருவரும் நிராகரித்த பிறகு விஜய் அணுகி முதல்வன் பட கதையை ஷங்கர் சொன்னார். அப்போது அரசியல் படங்களில் நடிக்க விஜய் மறுத்துவிட்டார். அதன் பிறகு இப்படத்தில் அர்ஜுன் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ரன்: லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரன். இப்படத்தில் ரகுவரன், அதுல் குல்கர்னி, அனுஹாசன், விவேக் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இயக்குனர் லிங்குசாமி முதலில் விஜயிடம் இப்படத்தின் கதையை சொல்ல சில காரணங்களால் இப்படத்தில் விஜய்யால் நடிக்க முடியாமல் போனது. பிறகு இப்படத்தில் மாதவன் நடித்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
ஆட்டோகிராஃப்: 2004இல் சேரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆட்டோகிராஃப். இப்படத்தில் சினேகா, கோபிகா என பலர் நடித்திருந்தார்கள். முதலில் இப்படத்தில் நடிக்க விஜயை அணுகினார் சேரன். இப்படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டார். பிறகு, இப்படத்தில் சேரனே ஹீரோவாக நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடு தேசிய விருதும் பெற்றது.
சண்டக்கோழி: லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் என பலர் நடித்து வெளியான திரைப்படம் சண்டக்கோழி. இயக்குனர் லிங்குசாமி முதலில் சூர்யாவிடம் இப்படத்தின் கதையை சொன்னார். அவர் மறுக்க பின்பு விஜயிடம் சொல்ல அவரும் நிராகரித்து விட்டார். பிறகு இப்படத்தில் நடிக்க விஷாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மற்ற மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
சிங்கம்: ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இயக்குனர் ஹரி இப்படத்தின் கதையை சொல்ல முதலில் விஜய் நாடினார். விஜய், இதுபோன்ற போலீஸ் கெட்டப் எனக்கு செட்டாகாது என மறுத்துவிட்டார். பின்பு இப்படத்தின் வாய்ப்பு சூர்யாவுக்கு செல்ல படம் பெரிய அளவில் ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது. பிறகு, இயக்குனர் ஹரி இப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை எடுத்தார்.