வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டைரக்சன் வேலைய பாக்க சொன்னா மாமா வேலையா பாக்குற.. விடாமல் துரத்தும் ப்ளூ சட்டை, பிஸ்மி

Blue Sattai Maaran: அண்மைக்காலமாகவே திரை பிரபலங்களின் முகத்திரை மொத்தமாக கிழிக்கப்பட்டு வருகிறது. அதிலும் சிவகார்த்திகேயன் பற்றி வெளிவந்த செய்தி இப்போது கூட நம்ப முடியாத அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

அதை தொடர்ந்து திரிஷாவை ஏடாகூடமாக பேசி வம்பில் சிக்கினார் மன்சூர் அலிகான். அந்த சர்ச்சை மிகப் பெரிய அளவில் வைரலானதை தொடர்ந்து மன்னிப்பே கேட்க மாட்டேன் என்று திரிந்த சிங்கம் இன்று மன்னிப்பு கேட்டு இருக்கிறது. அதனால் திரிஷா விவகாரம் ஒரு வழியாக முடிந்திருக்கிறது.

இதற்கு அடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. பல தரமான படைப்புகளை கொடுத்த இவர் நடிகை மனிஷா யாதவ்க்கு கொடுத்த டார்ச்சரை சினிமா விமர்சகர் பிஸ்மி ஒரு பேட்டியில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அதனால் தான் அந்த நடிகை சினிமாவை விட்டு ஓடினார் என்றும் ஒரு குண்டை போட்டார்.

Also read: நீங்க ஆம்பளையா, உங்களுக்கு எதுக்கு மீசை?. டாப் நடிகர்களை காரி துப்பும் ப்ளூ சட்டை

இது ஊர் வாய்க்கு கிடைத்த அவலாக மாறியது. சும்மாவே யாரை வம்புக்கு இழுக்கலாம் என பார்க்கும் ப்ளூ சட்டை மாறன் இதை கப்பென பிடித்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து இவர் சீனு ராமசாமியை தன் சோசியல் மீடியா பக்கத்தில் கிழி கிழி என கிழித்து வருகிறார்.

இந்த விஷயம் பரபரப்பு கூட்டியதை தொடர்ந்து சீனு ராமசாமி ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் மனுஷா யாதவ் ஒன்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததை மறக்கவே மாட்டேன். நீங்க சொல்றது தப்பு என கூறி இருக்கிறார். இப்படி இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் இப்போது பங்கமாக கலாய்த்துள்ளார்.

அந்த வகையில் டைரக்சன் வேலையை பார்க்க சொன்னா மாமா வேலையா பாக்குற. இனி நீ மாமனிதன் இல்ல மாமா மனிதன் என சகட்டுமேனிக்கு கலாய்த்துள்ளார். இப்படியாக இந்த விஷயத்தை விடாமல் ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிஸ்மி இருவரும் துரத்தி வருகின்றனர்.

Also read: எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான்.. ப்ளூ சட்டை வாயில் விழுந்து சின்னாபின்னமாகும் இயக்குனர்

Trending News