வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாதா காக்காவ சொன்னா அண்டங்காக்காவுக்கு கோபம் வருது.. ரஜினியை விமர்சித்து வான்டடா வண்டியில் ஏறிய ப்ளூ சட்டை

Actor Rajini: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருந்தாலும் ரஜினி பேசிய விஷயம் தான் இப்போது சோஷியல் மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது. அதிலும் உச்ச நடிகர்களை தேவையில்லாமல் வம்பு இழுப்பதையே ஒரு வேலையாக வைத்து வரும் ப்ளூ சட்டை மாறன் ரஜினியை விமர்சித்து வாண்ட்டாக வண்டியில் ஏறி இருக்கிறார்.

அதாவது சூப்பர் ஸ்டார் நேற்று விழா மேடையில் காகம், பருந்து கதை ஒன்றை கூறியிருந்தார். அதில் அவர் விஜய்யை தான் காகம் என்று கூறினாரோ என இப்போது பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது. ஆனால் நான்தான் அந்த காகம் என்று ப்ளூ சட்டை வாண்ட்டாக வந்து சிக்கி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

Also read: யாரு சொன்னா விஜய்ய தப்பா பேசினாருன்னு.. தூக்கி விட்டு அழகு பார்த்த ரஜினி, இவர் கூடவா போட்டி?

அதாவது அவர் இப்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் பருந்து மக்களிடம் ஒன்றி வாழாது காகம் தான் சேர்ந்து வாழும். சிறு உணவு என்றாலும் அதை காகம் பகிர்ந்து உண்ணும். ஒரு காகம் இறந்துவிட்டால் மற்றவை ஒன்று கூடும். ஆனால் பருந்து தன்னுடைய வேட்டையை தனியே ருசிக்கும்.

மேலும் பருந்து சுயநலத்துடன் தனியே வானில் பறந்து திரியும். உயரே பறப்பது மட்டும் உயர்ந்த குணம் கிடையாது. காகம் கருப்பாக இருப்பதால் தாழ்ந்து போய்விடாது. நீயும் கருப்புதான் என்பதை நினைவில் கொள், காமெடி பருந்தே என்று தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி சோசியல் மீடியாவில் நான் காகம் என்று யாரை சொன்னேன் என எழுதுவார்கள் என கூறிய ரஜினிக்கு அது ப்ளூ சட்டை மாறன் என்று பெயரை கூற திராணி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Also read: காகம் பருந்தாக முடியாது.. ரஜினி சொன்ன குட்டி கதை, வெடித்த அடுத்த சர்ச்சை

இதைப் பார்த்த ரசிகர்கள் தற்போது கொந்தளித்து போய் உள்ளனர். ரஜினி இருக்கும் உயரத்திற்கு ப்ளூ சட்டை மாறன் அளவுக்கு இறங்கி வந்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்கும்போது நான் தான் அந்த காக்கா என்று இவர் முன்வந்து கூறி இருப்பது ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

மேலும் தன்னைத்தானே இவர் பெரிய செலிபிரிட்டி என நினைத்துக் கொண்டு இப்படி காமெடியாக உளறுகிறார் எனவும் ரஜினி ரசிகர்கள் இவரை கிழித்து தொங்க விட்டு வருகின்றனர். இவ்வாறாக சாதா காக்காவ சொன்னா அண்டங்காக்காவுக்கு ஏன் கோபம் வருது என்ற ரீதியில் ப்ளூ சட்டை மாறன் சூப்பர் ஸ்டாரை விமர்சித்து வம்பில் சிக்கியுள்ளார்.

Also read: அதகளம் பண்ண வரும் முத்துவேல் பாண்டியன்.. ஜெயிலர் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்

Trending News