வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஒர்க் ஃப்ரம் ஹோம் வில்லன், டம்மி ஹீரோ.. ப்ளூ சட்டையிடம் சிக்கி சின்னாபின்னமான கல்கி

Blue Sattai Maran: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப்பச்சன் கூட்டணியில் கல்கி 2898 AD நேற்று வெளியானது. உலக அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்ட இப்படத்திற்கு தற்போது எல்லா பக்கம் இருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

அது மட்டும் இன்றி முதல் நாளிலேயே இப்படம் 191 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் விரைவில் ஆயிரம் கோடி என்ற இலக்கை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல இப்படத்தை கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

எப்போதுமே டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்தால் இவருக்கு குஷியாகி விடும். அதன் படி தற்போது கல்கி படத்தை இயக்குனர் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்லவில்லை என ப்ளூ சட்டை தெரிவித்துள்ளார்.

மேலும் 800 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்கும் என்ற சுவாரசியமான கதையை இயக்குனர் எடுத்திருக்கிறார். ஆனால் அப்போது கூட பிரபாஸ் விராட் கோலி மாதிரி தாடியை டிரிம் செய்து வைத்திருக்கிறார்.

கல்கியை பங்கம் செய்த ப்ளூ சட்டை

அவருடைய கெட்டப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் அவர் இருக்கும் குடோனில் இருந்து வெளிவருவதற்குள் இரண்டாம் பாதியே வந்துவிட்டது. சரி வில்லனுடன் இவருக்கு காட்சிகள் இருக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை.

இந்த கேப்பில் பல பேர் பிளாஸ்டிக் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அமிதாப்பச்சனுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் வில்லன் என்றால் பவராக இருக்க வேண்டும்.

ஆனால் இங்கு ஒரு வயசான தாத்தா ஐசியூவில் இருப்பவர்களுக்கு வயர் மாட்டி இருப்பது போல் இருக்கிறார். அதேபோல் இந்த வில்லன் ஒர்க் பிரம் ஹோம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என கண்டபடி கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

அது மட்டும் இன்றி இரண்டாம் பாகம் வேண்டவே வேண்டாம் நடந்தது நடந்து போச்சு இதோட நிறுத்திக்குவோம் என இயக்குனரையும் பங்கம் செய்திருக்கிறார். மேலும் ஒரு ஸ்பெஷல் பொங்கலில் ஏகப்பட்ட முந்திரிப்பருப்பு இருப்பது போல் படத்தில் துல்கர் சல்மான், தீபிகா படுகோன், கமல், அமிதாப் என ஓவர் அலப்பறை கொடுத்தார்கள்.

சரி பொங்கல் நல்லா இருக்கும்னு சாப்பிட உட்கார்ந்தா தேவையே இல்லாத அந்த மிளகு தான் மாட்டுது. முந்திரிப்பருப்பு எங்கன்னு தெரியல என கல்கி படத்தை கொத்து பரோட்டா போட்டு இருக்கிறார். எது எப்படி இருந்தாலும் இப்படம் தற்போது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாளிலேயே வசூலை தட்டி தூக்கிய கல்கி

Trending News