திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

Blue Sattai Maaran: இதுல 5வது பார்ட் வேற வரப்போகுதாம்.. மண்ட பத்திரம், அரண்மனை 4-ஐ கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை

Blue Sattai Maaran: சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. முதல் காட்சி முடிந்ததுமே படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிய தொடங்கியது.

அது மட்டுமின்றி கோலிவுட்டை மீட்டெடுத்த சுந்தர் சி என்றெல்லாம் ரசிகர்கள் ஆரவாரப்படுத்தினர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல இந்த படத்தை விமர்சனம் என்கிற பெயரில் கொத்து பரோட்டா போட்டு இருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, வழக்கமாக சுந்தர் சி படம் என்றால் கலகலப்பு காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதை நம்பி தான் தியேட்டருக்கு போனோம். ஆனால் இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்குதா?

எப்படி சர்ப்ரைஸ் பண்றேன் பாருங்க என காமெடியே இல்லாமல் ஆச்சரியப்படுத்தி விட்டார். மேலும் வழக்கமான பேயை காட்டாமல் பாக் என்ற புது பெயரில் பேயை காட்டி இருக்கிறார். ஆனால் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தான் தெரியவில்லை.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

அதேபோல் சுவாரசியம் இல்லாத காட்சிகளை கூட நீளமாக எடுத்து வைத்திருக்கிறார். ஒரு சண்டைக் காட்சியே மூன்று மணி நேரம் ஓடுகிறது. மற்றபடி சுவாரஸ்யம் என்று எதுவும் இல்லை.

மேலும் இப்போது சினிமாவில் யோகி பாபுவை போட்டாலே காமெடி என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் சுந்தர் சி-யாலயே அவரை வைத்து காமெடி பண்ண முடியவில்லை.

அதேபோல் இந்த மாதிரி படங்களுக்கு குழந்தை குட்டிகளுடன் குடும்பமாக வருவார்கள். ஆனால் பெரியவர்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு இந்த படம் இருக்கிறது.

இதில் ஐந்தாவது பாகம் வேற வரப்போகுதாம். மண்ட பத்திரம் என ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல இந்த படத்தையும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

Trending News