செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

காவிச் சட்டை, குங்குமம் வேஷம் போடணும்.. தில்லா அஜித் மாதிரி இருக்க முடியாது விஜய்? – ப்ளூ சட்டை

Ajith – Vijay: விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழா தொடங்கியதில் இருந்து விஜய் மற்றும் லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்வுகள் தான் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு ஆடியோ லான்ச் நடக்காத சோகம் தீர்ந்து போகும் அளவுக்கு தளபதி மேடையில் தெறிக்க விட்டுவிட்டார்.

இந்த நிகழ்ச்சியை எந்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்களோ, அதே அளவுக்கு அவரை பிடிக்காதவர்களிடமிருந்தும் கமெண்ட்டுகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ரத்ன குமார் பேசிய பேச்சால் ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் கொதித்து எழுந்து இருக்கிறார்கள்.

Also Read:கோமாவில் இருந்து எழுந்து வந்த விஜய்.. மொத்த சக்சஸ் மீட்டையும் அசிங்கப்படுத்திய லோகேஷின் வலது கரம்

நடந்து கொண்டிருக்கும் அக்கப்போர் பத்தாது என, பிரபல யூடியூபர் ப்ளூ சட்டை மாறன் அவருடைய பங்கிற்கு எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி இருக்கிறார். நேற்று நடந்த லியோ வெற்றி விழாவின் போது தொகுப்பாளர் நடிகர் விஜய்யிடம் 2026 என்றால் என்ன தோன்றுகிறது எனக் கேட்டார். அதற்கு விஜய் கப்பு முக்கியம் பிகில் என்று சொன்னார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை அதற்கு கட்சி தொடங்கணும் பிகிலே என ட்வீட் போட்டார்.

இந்த கலவரம் போதாது என்று, இன்று அஜித் ரசிகர்களை குளிர்விக்கும் விதமாக ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் கருப்பு பணத்தை சம்பளமாக வாங்குபவன், பிளாக் டிக்கெட்டை பல்காக விற்பவன், பினாமியை தயாரிப்பாளர் ஆக்குபவன், அரசியலுக்கு வருவேன் என அல்வா கொடுப்பவன் தான் ரெய்டுக்கு பயப்படனும், காவிச் சட்டை குங்குமம் வேஷம் போடணும் என சொல்லியிருக்கிறார்.

மேலும், வெள்ளை பணத்தை சம்பளமாக வாங்கி, நேர்மையா வரி கட்டுகிறவன், நிம்மதியாய் இருக்கலாம் ரெய்டை தைரியமாக எதிர்கொள்ளலாம் என பதிவிட்டிருக்கிறார். இவருடைய இந்த ட்வீட்டுக்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள், அஜித்தின் ரசிகராக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மறுபக்கம் விஜய் ரசிகர்கள், விஜய் வரி செலுத்தாமல் எப்போது ஜெயிலுக்கு போனார், எந்த ரெய்டில் அவர் மீது தப்பு இருக்கிறது என உறுதியானது என்று ப்ளூ சட்டையை கேள்வி மேல் கேள்வி கேட்டு கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடுநிலையான மக்கள் அட ப்ளூ சட்டைக்கு இது தான் வேலை, திடீரென விஜய் பக்கம் பேசுவார், திடீரென அஜித் பக்கம் பேசுவார் என கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Also Read:யாரு சூப்பர் ஸ்டாரு? யாரு தல? எல்லாத்துக்கும் மொத்தமா தளபதி வைத்த சுவாரஸ்யமான முற்றுப்புள்ளி

Trending News