ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

10 சின்ன படங்களை காலி பண்ணிட்டிங்களே!. விடுதலை 2, புஷ்பா 2-க்கு இப்படி பண்ணுவிங்களா, பிரபலம் காட்டம்

Viduthalai 2: எளியவன் சொல் அம்பலம் ஏறாதுன்னு சொல்லுவாங்க, அப்படி ஒரு விஷயம் தான் சமீபத்தில் நடந்து இருக்கிறது. 90 களின் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் சினிமா விமர்சனத்தின் அருமை தெரியும். வெள்ளிக்கிழமை சன் டிவியில் அந்த வாரம் ரிலீஸ் ஆன புது படத்தின் திரைவிமர்சனம் ஒளிபரப்பாகும்.

படத்தின் பாஸிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை தொகுப்பாளர் அளவோடு தொகுத்து வழங்க, சின்ன சின்ன கிளிப்புகள் ஒளிபரப்பாகும். அப்போதே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நமக்கு அதிகரித்து விடும்.

அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமீபத்தில் ரிலீசான படங்களில் முதல் பத்து படத்தை எந்த படங்கள் பிடித்திருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த நிகழ்ச்சியிலும் படத்தின் சின்ன கிளிப்புகளை ஒளிபரப்பி படம் பார்க்க நம்மை தூண்டிவிடுவார்கள். ஆனால் இப்போது விமர்சனமே தலைகீழாகிவிட்டது.

விடுதலை 2, புஷ்பா 2-க்கு இப்படி பண்ணுவிங்களா

தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இன்டர்வெல்லின் போது முதல் பாதி படம் எப்படி இருக்கிறது என விமர்சனம் கொடுத்து விடுகிறார்கள். படம் முடித்து வெளியே வரும்போது விமர்சனத்தோடு தான் வெளியில் வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான கங்குவா படத்திற்கும் இதுதான் நடந்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான நெகட்டிவ் விமர்சனங்களால் தான் படம் தோல்வி அடைந்து விட்டது என்ற மாயபிம்பம் உருவாக்கப்பட்டது. இனி தியேட்டர் வாசல்களில் யூடியூபர்கள் மக்களிடையே விமர்சனம் எல்லாம் கேட்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

கங்குவா படத்திற்குப் பிறகு ரிலீசான எமக்கு தொழில் ரொமான்ஸ், ஜாலியோ ஜிம்கானா, நிறங்கள் போன்ற படங்களின் விமர்சனங்கள் எல்லாம் அவ்வளவாக வெளிவரவில்லை. இது குறித்து ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

கங்குவா படத்திற்கு பிறகு இந்த விமர்சனங்களுக்கு தடை விதித்ததால் கடந்த வாரம் ரிலீஸ் ஆன நிறைய படங்கள் பெரிய அளவில் பாதித்தது. ஆர் ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் படம் நேற்று ரிலீஸ் ஆனதும் அவரே தியேட்டர் வாசலில் மைக் எடுத்துக் கொண்டு போய் விமர்சனம் சொல்ல சொல்லி தரமான சம்பவத்தை பண்ணி விட்டார்.

ஆர் ஜே பாலாஜியை இது குறித்து யாருமே கேள்வி கேட்க மாட்டீர்களா. உங்கள் ரூல்ஸ் எல்லாம் அவருக்கு கிடையாதா அடுத்த ரிலீஸ் ஆகும் புஷ்பா 2 விடுதலை டு போன்ற படங்களுக்கு இதே மாதிரி விமர்சனங்களுக்கு தடைவிதிப்பீர்களா என அடுக்கடுக்காக கேள்வி கேட்டிருக்கிறார் ப்ளூ சட்டை

Trending News