Vijay : நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய்யின் பேச்சு தான் இன்று டாக் ஆப் த டவுன் ஆக இருக்கிறது.
விஜய் அதிரடியான கேள்விகளால் அரங்கத்தையே அதிரசெய்து விட்டார். இந்த சூழலில் ப்ளூ சட்டை மாறன் விஜய்யை விமர்சித்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவு போட்டிருக்கிறார்.
அதில் ஆளும் கட்சியான திமுக அரசை விமர்சித்து பேசியதெல்லாம் சரிதான். ஆனால் அதிமுக அரசை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லையே.
2021 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 10 ஆண்டுகள் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அதில் முதல் குற்றவாளியாக தண்டனை பெற்ற ஜெயலலிதா பற்றி பேசாமல் பம்முவது ஏன்.
விஜய்யை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

ஏனென்றால் ஜெயலலிதாவை பற்றி பேசினால் பெண்கள் ஓட்டு கிடைக்காது என்பதாலா. சாமானிய மனிதரை கேட்டால் கூட சொல்லுவார்கள் அதிமுக மற்றும் திமுக இரண்டும் தான் எங்களை ஆண்டது.
இது அல்லாத ஒரு புதிய கட்சி வரவேண்டும் என்று கூறுகின்றனர். அவ்வாறு சாமானிய மக்களுக்கு உள்ள புரிதல் கூட உங்களுக்கு இல்லையா.
திமுகவை கடித்து வைத்து அதிமுகவுக்கு சொம்பு தூக்குவது போல் செயல்படுகிறீர்கள் என விஜய்யை வச்சி செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
அதிமுக இப்போது பிளவு பட்டு இருக்கும் நிலையில் அதை ஒரு பொருட்டாகவே விஜய் மதிக்கவில்லை. கடைசியாக தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்பதை வெளிப்படையாகவே கூறிவிட்டார்.