வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

ப்ளூ சட்டைக்கு கொலை மிரட்டல்.. உயிர் பயத்தில் ரஜினிக்கு வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

Blue Sattai Maaran – Rajinikanth: கடந்த சில மாதங்களாகவே ப்ளூ சட்டை மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எதிராக பல ட்வீட்டுகளை பகிர்ந்து வருகிறார். அதிலும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்ததிலிருந்து ரொம்பவும் மட்டமான கமெண்ட்டுகள் மற்றும் மீம்ஸ்களை வெளியிட்டு ரஜினியை சீண்டிப் பார்த்து வருகிறார். இது சமீபத்தில் ரஜினி ரசிகர்களுக்கு பயங்கர கோபத்தை கிளப்பி இருக்கிறது.

தன்னை ஒரு சினிமா விமர்சகராக அடையாளப்படுத்தி கொண்டிருந்த ப்ளூ சட்டை மாறன், சமீப காலமாக முன்னணி ஹீரோக்களை ரொம்பவும் மட்டம் தட்டி விமர்சனம் செய்து வருகிறார். இது அந்தந்த ஹீரோக்களின் ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பும் விதமாக அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் ப்ளூ சட்டை தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

Also Read:உயிர் நண்பன் ரகுவரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத ரஜினி.. கண்ணீருடன் அவர் அம்மா சொன்ன காரணம்

தன்னுடைய பதிவோடு ப்ளூ சட்டை ஒரு ஆடியோ ஆதாரத்தையும் பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒருவர் எவன் முதலில் மைக்கை பிடித்து நெகட்டிவ் விமர்சனத்தை கொடுக்கிறானோ அவனை தலையிலேயே போட்டு விடு என ஐடியா கொடுப்பது போல் பேசப்பட்டிருக்கிறது. ஆடியோவின் முழு கண்டண்டும் சரியாக தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும் ஜெயிலருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுப்பவர்கள் மீது கொலை மிரட்டல் விடுப்பதாக இருக்கிறது.

இந்த ஆடியோவை வெளியிட்டு ப்ளூ சட்டை மாறன் இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்றும், பேச்சு சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. யாருடைய பேச்சு சுதந்திரத்தையும் கழுத்தை நெரித்து அமுக்க முடியாது போன்ற கருத்துக்களை சொல்லி இருக்கிறார். மேலும் இவர் ரஜினிக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்திருக்கிறார்.

Also Read:ரஜினிக்கு பிடித்த சரக்கு மற்றும் சிகரெட் பிராண்ட் இதுதான்.. ஒரு நாளைக்கு இத்தனை பாக்கெட் குடிப்பாரா.?

அந்த பதிவில் ரஜினிக்கு தெரிந்து தான் இதெல்லாம் நடக்கிறதா, இல்லை தெரியாமல் நடக்கிறதா, இந்த பதிவை பார்த்த பிறகாவது அவர் இவர்கள் இப்படி பேசுவதை தடுத்து நிறுத்த வேண்டும், ரஜினி சொன்னால் அவர்கள் கேட்பார்கள் என நம்புகிறேன் என பதிவிட்டிருக்கிறார்.

உண்மையிலேயே இந்த ஆடியோ ரஜினி ரசிகர்களால் தான் பேசப்பட்டு இருக்கிறதா, அல்லது வேறு ஏதாவது வதந்தியா என சரியாக தெரியவில்லை. ஆனால் சமீப காலமாக ரஜினியை வம்பு இழுத்துக் கொண்டிருந்த ப்ளூ சட்டை மாறனுக்கு இந்த ஆடியோ ஒரு உயிர் பயத்தை காட்டி இருக்கிறது. அதனால் தான் ரஜினி இடமே நேரடியாக கோரிக்கை வைத்திருக்கிறார்.

Also Read:31 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைய இருந்த உயிர் நண்பன்.. கடைசி நேரத்தில் ஜெயிலரில் வில்லனான விநாயகன்

Trending News