பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு எப்படி வரவேற்பு கிடைத்ததோ அதேபோல் இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மணிரத்னத்தால் மட்டும் தான் இந்த படத்தை இவ்வளவு சிறப்பாக எடுக்க முடியும் என ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் போது ப்ளூ சட்டை மாறன் இப்படத்தை பங்கமாக கலாய்த்து இருந்தார். ஆகையால் ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்கு காத்திருந்ததை விட ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்காக பெரிதும் காத்திருந்தனர். அவர்கள் நினைத்தது போல எவ்வளவு முடியுமோ அவ்வளவு வச்சு செய்துள்ளார்.
Also Read : சல்மான் கானால் மன உளைச்சலுக்கு ஆளான ப்ளூ சட்டை மாறன்.. உசுர கையில புடிச்சுகிட்டு பார்த்த படம்
அதாவது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் எல்லா கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்வதற்கே படம் முக்கால்வாசி முடிந்து விட்டது. இரண்டாவது பாகத்திலாவது ஏதாவது இருக்கும் என்று பார்த்தால் காலி பெருங்காய டப்பாவாக மணிரத்தினம் படத்தை எடுத்துள்ளார். அதாவது டப்பாவில் பெருங்காயம் இல்லாமல் வாசம் மட்டும் இருப்பது போல பொன்னியின் செல்வன் 2 படத்தை எடுத்திருக்கிறார்கள்.
மேலும் படத்தில் உள்ள எல்லோருமே பளபளனு என்று இருக்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களாக அவர்களை ஏற்க முடியவில்லை. பொன்னியின் செல்வன் 2 படத்தில் பார்க்கும்போது கார்த்தி, ஜெயம் ரவி ஆகத்தான் தெரிகிறார்கள். வந்தியத்தேவன், அருள்மொழி வருமன் என்று யாராலும் அவர்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
Also Read : ஜவானை விட லியோவுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு.. பொன்னியின் செல்வனில் என்ட்ரி கொடுத்த விஜய்
மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் யார் தண்ணீரில் விழுந்தாலும் ஒரு ஆயா வந்து காப்பாற்றி விடுகிறது. யாருமே போகாத இடமாக இருந்தாலும் இந்த ஆயா மட்டும் எப்படி காப்பாற்றுகிறது என்ற சந்தேகம் இருப்பதாக ஐஸ்வர்யா ராய்யை ப்ளூ சட்டை மாறன் வச்சி செய்துள்ளார்.
மேலும் படத்தில் ஒரு ட்விஸ்ட் இல்லை, இது போல தான் எம்ஜிஆர், கமல் போன்ற பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க நினைத்தார்கள் என மணிரத்தினத்தையும், பொன்னியின் செல்வன் படத்தையும் காரி துப்பி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதுமட்டும்இன்றி இதற்கு பேசாமல் பருத்தி மூட்டை சும்மாவே இருந்திருக்கலாம் என கலாய்த்து தள்ளி உள்ளார். இதைப் பார்த்த பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி திட்டி வருகிறார்கள்.
Also Read : மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பொன்னியின் செல்வன்.. பாகுபலி விட ஆயிரம் மடங்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா?