வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

காசு கொடுத்து பிரபாஸின் கேரியரை க்ளோஸ் செய்ய நடக்கும் சதி.. ப்ளூ சட்டை வெளியிட்ட ஷாக்கான பதிவு

Actor Prabhas: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு பட்டிதொட்டி எங்கும் பரிச்சயமானார். பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே நல்ல வசூலை பெற்று தந்தது. இதனால் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் பிரபாஸை நாடி வந்தது.

அவ்வாறு பல கோடி மதிப்பில் பிரபாஸ் படம் வெளியானாலும் பாகுபலி படத்திற்கு பிறகு இவருக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. எப்படியும் ஆதிபுருஷ் படத்தின் மூலம் விட்ட மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்ற பிரபாஸ் கனவில் இருந்தார். ஆனால் அது முழுக்க முழுக்க கனவாகவே போய்விட்டது. 600 கோடி பட்ஜெட்டில் ஏற்படும் எடுக்கப்பட்டது.

Also Read : ஆள விடுங்கடா சாமி என மாயமான பிரபாஸ்.. ராஜமவுலி எடுத்தா கூட என்னை விட்ருங்கப்பா

போட்ட பட்ஜெட்டை கூட படம் எடுக்க முடியாமல் திணறியது. இவ்வாறு பிரபாஸ் தொடர் சருக்களை சந்தித்து வரும் நிலையில் அவரது மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருந்தது. அதை தூக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காக உருவாகி வருகிறது ப்ராஜெக்ட் கே. கமலஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன் என பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் படையெடுத்து உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் ப்ராஜெக்ட் கே படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியிருந்தது. மிகவும் செயற்கையாக இருந்த இந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் இணையத்தில் கிண்டல் அடித்து பதிவு போட்டு வருகிறார்கள். ஆதிபுரூஸ் படத்தை விட இப்படம் மிகவும் மோசமாக இருக்கும் என்பது போஸ்டரை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : ரஜினியை மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை.. வடிவேலு காமெடியை வைத்து பண்ணும் அலப்பறை

இதைத்தொடர்ந்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ப்ராஜெக்ட் கே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் களவாணி படத்தில் கஞ்சா கருப்பு புகைப்படத்தை வெளியிட்டு பிரபாஸ் சொல்வது போல் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

அப்படி சொந்த காசை போட்டு செலவு பண்ணி என் கேரியர முடிகிறது இல்ல அப்படி என்ன உங்களுக்கு சந்தோஷம் என பிரபாஸ் தயாரிப்பாளர்கள் இடம் கேட்பது போல் ப்ளூ சட்டை பதிவு போட்டிருக்கிறார். அதுவும் உண்மைதான் என பலரும் ப்ளூ சட்டை மாறனின் பதிவுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : மாவீரன் இந்த படத்தின் காப்பியா.? தேவையில்லாமல் உளறி வாங்கி கட்டிக் கொண்ட ப்ளூ சட்டை

Trending News