செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன் படத்திற்கு வந்த சிக்கல்.. தம்பி வச்சாங்களா உனக்கே ஆப்பு!

தமிழ் சினிமாவில் பல படங்களை விமர்சனம் செய்ததன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் எந்த ஒரு இயக்குனரையும் புகழ்ந்து பேசியதை கிடையாது. எந்த ஒரு படத்தை எடுத்தாலும் அதில் இருக்கும் குறையை மட்டும் சுட்டிக்காட்டி கேவலப்படுத்துவது வாடிக்கையாக வைத்திருந்தார்.

ஒருகட்டத்தில் இவரை ரசித்த ரசிகர்களே எல்லா இயக்குனர் படத்தையும் குறை சொல்கிறீர்கள் ஏன் இதுவரைக்கும் நீங்கள் ஏதாவது ஒரு படத்தை எடுத்துள்ளீர்களா படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தனர்.

இதனால் ப்ளூ சட்டை மாறன் ஆன்ட்டி இந்தியன் எனும் படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரை அவரது யூடியூப் சேனலில்  வெளியிட்டிருந்தார் அதில் மூன்று  மதத்தையும்  மற்றும் அரசியலை மையப்படுத்தி  படத்தின் கதை  உருவானதாக தெரிந்தது.

anti indian
anti indian

 

இந்த டிரைலரை பார்த்த ரசிகர்களே பல இயக்குனர்கள் குறைசொல்ல நீங்களே மதத்தையும் மற்றும் அரசியலை மையப்படுத்தி அரைச்ச  மாவை அரைத்தது போலதான் படத்தை  எடுத்துள்ளீர்கள் என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து கிண்டல் செய்தனர். அதுமட்டுமில்லாமல கமுக, அகமுக என இரு கட்சியையும் கிண்டல் செய்யுமாறு வசனங்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.

blue sattai maran
blue sattai maran

ஆன்ட்டி இந்தியன் படத்தை பார்த்த சென்சார் குழு ஆட்சேபகரமான வசனங்கள் மற்றும் ஒரு சில தவறான காட்சிகள் இருந்ததால் முழுமையாக ஆன்ட்டி இந்தியன் படத்தை நிராகரித்து தடை செய்தனர். அதன் பிறகு பெங்களூரில் உள்ள பிரபல இயக்குனர் நாகாபரண தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மீண்டும் இப்படத்தை பார்த்தனர். படம் நல்லா இருக்கிறது என்ன படக்குழுவினரை பாராட்டினார்.

 ஆனால் இவர்கள் சொல்லும் காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டும் என கூறியுள்ளனர் அப்படி நீக்கினால் படத்தின் கதை மாறிவிடும் என ஒரு சட்டை மாறன் கூறியுள்ளார். 

அதனால் ரி ரிவைசிங் கமிட்டி அல்லது கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் எத்தனை இயக்குனர் படத்திற்கு ஆப்பு வைத்திருப்பீர்கள். தற்போது உங்களுக்கு ஆப்பு  வைத்தார்களா என கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். 

- Advertisement -spot_img

Trending News