வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2 நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்த தளபதி விஜய்.. அஜித்தை கிண்டல் அடித்து ப்ளூ சட்டை போட்ட பதிவு

Actor Vijay: கடந்த இரண்டு நாட்களாக எங்கு பார்த்தாலும் விஜய் பற்றிய பேச்சு தான். அதாவது சனிக்கிழமை விஜய் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களை தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி இருந்தார். இதனால் விஜய்கல்விவிருது என்ற ஹேஷ் டேக் இணையத்தில் ட்ரெண்டானது.

அதில் மாணவர்களுக்கு அறிவுரையுடன் விஜய் அரசியலும் பேசி இருந்தார். இது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி விஜய்யின் இந்த நியூ லுக் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருந்தது. அவர் பேசிய வீடியோ இணையம் முழுக்க நிறைந்து இருந்தது.

Also Read : ராசி இல்லை என ஓரம் கட்டப்பட்ட விஜய் பட ஹீரோயின்.. மார்க்கெட் சரிந்ததால் எடுத்த அதிரடி முடிவு

விஜய்யின் பிறந்தநாளன்று லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகிறது. இவ்வாறு விஜய்யை பற்றிய செய்திகள் இணையத்தை ஆக்கிரமித்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் அஜித்தை கிண்டல் செய்து இருக்கிறார். இதற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவி வருகிறது.

அதாவது தல பைக் டூர், ஏர்போர்ட்டில் வந்த ரசிகருடன் எளிமையாக போட்டோவுக்கு போஸ்னு கண்டன்ட்டை இறக்கி விடு. அப்பதான் சுறாவுக்கு பதிலடி தர முடியும். ரெண்டுநாளா எங்க பாத்தாலும் அவர்தான் வைரல். சீக்கிரம் போட்டோவை எறக்கு. இன்னைக்கு மண்டே வேற. ஏகப்பட்ட ஜோலி கெடக்கு என்று பதிவிட்டு இருக்கிறார்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் விஜய்யின் படம் கிடைக்கும்.. பகிரங்கமாக பேட்டியளித்த நடிகை

அஜித்தின் விடாமுயற்சி அறிவிப்பு வெளியானதுடன் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருக்கிறது. அதுமட்டுமின்றி வேர்ல்ட் டூர் அஜித் செல்வதற்கான ஏற்பாடும் நடந்து வருகிறது. ஆனால் இதைப் பற்றி எந்த செய்திகளும் வராத நிலையில் அஜித் அப்போது ஏர்போர்ட்டுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிறது.

அதை மட்டுமே அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். தற்சமயம் அந்த புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் விஜய்யை வைத்து ப்ளூ சட்டை அஜித்தை நக்கலடித்த கமெண்ட் செய்துள்ளார். ஆகையால் விரைவில் விடாமுயற்சியின் தரமான அப்டேட் வந்து ப்ளூ சட்டை மாறனின் வாயை அடைக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த அஜித்.. விடாமுயற்சிக்கு இருந்த பிரச்சினை அனைத்தும் சரி செய்த ஏகே

Trending News