வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கேம் சேஞ்சர் கேப்டன் படத்தின் காப்பியா.? கலர் கலரா ரீல் ஓட்டுறாங்க, நக்கலடிக்கும் ப்ளூ சட்டை

Game Changer: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் பல வருடங்களாக உருவாகி வந்தது. ஒரு வழியாக வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இப்படத்தின் பிரமோஷன் தற்போது நடந்து வருகிறது.

அதிலும் இந்த முறை ஷங்கர் பிரமோஷனில் தீயாக கலந்து கொண்டு வருகிறார். ஏனென்றால் இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

அது மட்டும் இன்றி ஷங்கர் இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி அப்டேட் ஆகவில்லை என்ற கமெண்ட்டும் இருந்தது. அதனாலயே கேம் சேஞ்சர் படத்தை அவர் பெரிதும் நம்பி இருக்கிறார்.

கேம் சேஞ்சர் கேப்டன் படத்தின் காப்பியா.?

ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் இப்படம் விஜயகாந்த் நடித்த தென்னவன் படத்தின் காப்பி என தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் கேம் சேஞ்சர் படத்தின் கதை என்னவென்றால் ஐஏஎஸ் அதிகாரிக்கும் ஆளுமை மிக்க அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் மோதல் தான்.

அப்படித்தான் தென்னவன் படத்தில் தேர்தல் ஆணையருக்கும் முதல்வருக்கும் நடக்கும் மோதல்தான் கதைக்கரு. கிட்டத்தட்ட இரண்டு படங்களும் ஒரே மையக் கருதான்.

ஏற்கனவே விஜயகாந்தின் சத்ரியன் தெறி படமாக வெளிவந்தது. ராஜதுரை படத்தை காப்பி அடித்து கோட் படம் வந்தது.

அந்த வரிசையில் கேம் சேஞ்சர் இணைந்துள்ளது. இப்படி கேப்டன் படத்தை வைத்து வேற வேற கலரில் படம் காட்டுறாங்க என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Trending News