சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

Blue Sattai Maran: ட்ரெய்லரை காட்டி கூட்டத்தை கூட்டிட்டாங்க.. கவினின் ஸ்டாரை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை

Blue Sattai Maran: இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான ஸ்டார் நேற்று வெளியானது. இதற்காக படு பயங்கர பிரமோஷன் செய்த படக்குழு முதல் நாளிலேயே தியேட்டருக்கு ரசிகர்களை வரவைத்து விட்டது.

கவினின் முந்தைய படங்களின் வெற்றியும் இதற்கு ஒரு காரணம். அதனாலேயே நேற்று முதல் காட்சியை காண ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக வந்தனர். அதை அடுத்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் வந்தது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல ஸ்டார் படத்தை கழுவி ஊற்றி விமர்சனம் செய்துள்ளார். அதில் ஹரிஷ் கல்யாண் நல்ல வேளை இதில் நடிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

அப்போதே கவினுக்கு தெரிந்திருக்க வேண்டும் என பங்கம் செய்துள்ளார். மேலும் சினிமாவை எடுக்க தெரியலனா கூட பரவால்ல சினிமான்னா என்னன்னு கூட தெரியல.

ப்ளூ சட்டையின் ஸ்டார் விமர்சனம்

ஹீரோ நடிப்பை கத்துக்க மும்பை செல்வதெல்லாம் ஓவர். இங்க தமிழ்நாட்டுல நடிப்பு பட்டறை கிடையாதா? இங்க இல்லனாலும் கேரளாவுக்காவது போய் இருக்கலாம்.

அதை விட்டுவிட்டு மும்பைக்கு போவதெல்லாம் ஏத்துக்க முடியாது. அங்க இருக்கிற ஹீரோக்களே நடிக்க தெரியாமல் விஜய் ஆண்டனி மாதிரி பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க என கிண்டல் அடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்து பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்ப படம் பார்த்தவர்கள் எல்லாம் இந்த ட்ரெய்லரை கட் செய்தவரை வெறிகொண்டு தேடிக்கிட்டு இருக்காங்க.

அந்த அளவுக்கு ட்ரெய்லரை காட்டி ஏமாத்திட்டாங்க என புலம்பாத குறையாக ப்ளூ சட்டை பேசியுள்ளார். ஸ்டார் படத்தை சினிமா விமர்சகர்கள் ஆகா ஓகோ என பாராட்டி வரும் நிலையில் ப்ளூ சட்டையின் இந்த விமர்சனம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Trending News