நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படம் தலைவர் 169. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அதாவது நெல்சனின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனால் நெல்சனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்த வந்த நிலையில் விக்ரம் படம் வெளியாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் லோகேஷ் உடன் நெல்சனை ஒப்பிட்டு பல ட்ரோல்கள் இணையத்தில் உலாவி வந்தது. இதனால் நெல்சன் மீண்டும் தன்னை தலைவர் 169 படத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரஜினி ரசிகர்களை அதிருப்தியில் உள்ளாக்கியது. அதாவது ரஜினியின் போட்டோ இல்லாமலேயே ஒரு ரத்தக்கறையுடன் அருவாளை வைத்த ஜெயிலர் என்ற டைட்டில் வெளியானது. மேலும் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அவசரமாக இந்த டைட்டில் தேவையா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் படங்களை விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் ஜெய்லர் படத்தின் போஸ்டரை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார். அதாவது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு பாழடைந்த தொழிற்சாலை புகைப்படம் இருப்பது போல காண்பிக்கப்பட்டுள்ளது.
அந்த தொழிற்சாலையின் ஒரிஜினல் போட்டோ கூகுள் பேக்ரவுண்ட் போட்டோஸ் இல் இருந்து சுடப்பட்டு உள்ளது. இதை பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனை தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு போட்டோ ஷூட் கூட நடத்தாமல் இப்படி கூகுளில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நெல்சன் பயன்படுத்தி உள்ளாரே என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் ரஜினி உட்பட தலைவர் 169 படக்குழு அப்செட்டில் உள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இந்த நிலைமை என்றால் படம் எப்படி வரப்போகிறதோ என்ற கவலையில் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.