Pushpa 2-Blue Sattai Maran: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று புஷ்பா 2 வெளியானது. ஏற்கனவே பிரமோஷன் அலப்பறை பயங்கரமாக இருந்த நிலையில் ரசிகர்களின் ஆரவாரமும் நேற்று அதிகமாக தான் இருந்தது.
படத்தைப் பார்த்த பலரும் ஆஹா ஓஹோ என புகழ்ந்து வரும் நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்ற கமெண்ட்டுகளும் வருகிறது.
இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன் பங்குக்கு புஷ்பா 2வை பிரித்து மேய்ந்துள்ளார். அதன்படி புஷ்பா படத்தின் முதல் பாகமே ஏன் நல்லா ஓடுச்சுன்னு இன்னும் தெரியல.
இதுல இரண்டாவது பாகம் வேற எடுத்து வச்சிருக்காங்க. முதல் காட்சியே ஹீரோ கண்டெய்னருக்குள் 45 நாட்கள் இருந்து ஜப்பானுக்கு செல்கிறார்.
அங்கு ஜப்பான்காரன் தமிழ் பேசுகிறான் ஆனால் இவர் ஜப்பான் மொழி பேசுகிறார். இது ரொம்ப புதுசா இருக்கு என நக்கல் அடித்துள்ளார்.
மேலும் எல்லா படத்திலும் ஹீரோ தான் கதையை தாங்கிப் பிடித்திருக்கிறார் என சொல்வார்கள். இந்த படத்தில் நாம் அதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
ரொம்ப தாங்கி தாங்கி சைடு வாங்கி போயிருக்கிறார் என பங்கம் செய்திருக்கிறார். அதேபோல் முதல் பாதி நன்றாகவே இருந்தது .ஆனால் இரண்டாம் பாதியில் ஒன்றும் இல்லை.
கடைசியில் குடும்ப செண்டிமெண்ட்டை கொண்டு வந்து அழ வைத்திருக்கின்றனர். அதிலும் சண்டைக் காட்சிகள் எல்லாம் ஓவர் பில்டப். ஹீரோ யாரை பார்த்தாலும் கழுத்தை கடித்து வைக்கிறார்.
முதல் பாகத்தில் புஷ்பானா ஃபயர் என சொன்ன ஹீரோ இந்த பாகத்தில் வைல்ட் ஃபயர் அவரு இவரு என தனக்குத்தானே பில்டப் கொடுக்கிறார்.
மேலும்cஇந்த படத்தை தியேட்டரில் பார்க்கும்போது உடம்பு வலி தலைவலி எதுவும் வரவில்லை. ஆனால் பார்த்து முடித்த பிறகு ஏன் பார்த்தோம் என தோன்றாமல் இல்லை.
இதற்கு மேல் இந்த படத்தை பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் இஷ்டம் என ப்ளூ சட்டை மாறன் புஷ்பா 2 படத்தை விமர்சித்துள்ளார்.