Vijay Antony : விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோமியோ படம் வசூலில் மந்தமடைந்துள்ளது. மேலும் இந்த படத்தைப் பற்றி ப்ளூ சட்டை மாறன் மோசமான விமர்சனம் கொடுத்திருந்தார். இதனால் மனமுடைந்து போன விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருந்தார்.
அதாவது நல்ல படங்களை தவறாக விமர்சித்து சொல்லும் ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலர் பேச்சை நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் இருக்காதீர்கள். ரோமியோ போய் பாருங்க நல்ல படம், அன்பே சிவம் படத்தைப் போல இதை ஆக்கிவிடாதீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு பதிவு போட்டு முதலை வாயில் சிக்கியது போல தான் இப்போது விஜய் ஆண்டனியின் நிலைமை இருக்கிறது. அதாவது அந்த பதிவிற்கு ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்விட் செய்து வருகிறார். அதாவது கோடம்பாக்கம் சாவர்க்கர்கள் விஜய் ஆண்டனிக்கு ஆதரவு.
விஜய் ஆண்டனிக்கு ஆதரவு தரும் கோடம்பாக்கம் சாவர்க்கர்கள்

ரோமியோ படம் அன்பே சிவம் போல் இருக்கும் என நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி கூறியுள்ளதாக ப்ளூ சட்டை ட்விட் செய்துள்ளார். அதுவும் கீழே கவுண்டமணியின் ஐயா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லையா என்று புகைப்படத்தையும் போட்டுள்ளார்.
ஐயா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லையா

அலைகடலென திரண்டு ரோமியோ ஓடும் தியேட்டர்களை நிரப்புங்கள் தற்போதைக்கு திருந்திய ப்ளூ சட்டை. மேலும் ரத்தம், கொலை, ரோமியோ என ஹாட்ரிக் பிளாப் தந்ததற்கு நாங்கள் தான் அனுதாபம் தெரிவிக்கணும்.
போஸ்டரை வைத்து பப்ளிசிட்டி

இவர் என்ன காமெடி பண்றாரு என விஜய் ஆண்டனியை கலாய்த்து உள்ள ப்ளு சட்டை. மேலும் முதலிரவில் மனைவி சரக்கு அடிக்கும் போஸ்டரை வைத்து பப்ளிசிட்டி. ஆனால் மக்கள் இதைக் கண்டு கொள்ளாததால் இப்போது விமர்சகர்களை பிராண்டி வருகிறார்.
தற்போதைக்கு திருந்திய ப்ளூ சட்டை

மேலும் அடுத்தது சக்சஸ் மீட் வைத்தால் தமாசாக இருக்கும். கொஞ்சமாவது நடிக்க கத்துக்கோங்க. உங்க படம் நல்ல படமா மக்கள் சொல்லட்டும் என மொத்தமாக டேமேஜ் செய்துள்ளார் ப்ளூ சட்டை.