Rajini,Blue Sattai Maran: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் யார் எவர் என்று பார்க்காமல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எல்லோரையும் தாறுமாறாக கலாய்த்து வருகிறார். அதிலும் குறிப்பாக ரஜினியை மீண்டும் மீண்டும் வம்பு இழுத்து வருகிறார். அதாவது காவாலா படத்தில் தமன்னாவுடன் டான்ஸ் ஆடும் போது தாத்தா என்று கலாய்த்து இருந்தார்.
இப்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் இடம்பெற்ற பாடல் வரிகளை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதில் குட்டிச்சுவத்த எட்டிப்பாத்தா உசுர கொடுக்க கோடி பேரு என்ற வரி இடம் பெற்றிருக்கிறது. அதாவது ரஜினிக்காக உயிரைக் கொடுக்க கோடி பேர் வருவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
Also Read : ஒரே நாளில் ரிலீஸாகி வெள்ளிவிழா கண்ட 3 படங்கள்.. ரஜினி, கமலை பீதி அடைய வைத்த நாயகன்
பொதுவாக டாப் நடிகர்களை நம்பி படங்கள் தயாரிக்க பெரிய நிறுவனங்கள் வருவதற்கான காரணம் அவர்களது ரசிகர்கள் தான். படம் சுமாராக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் எப்படியும் பல மடங்கு வசூலை பெற்று தந்து விடுவார்கள். அதேபோல் ரஜினிக்கும் கோடான கோடி ரசிகர்கள் இருப்பது உண்மைதான்.
ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் தனக்கு பிடித்த ரசிகர்களுக்காக உயிரைக் கொடுப்பதை எல்லாம் சும்மா வாய் பேச்சுக்கு தான். இதை வெளிப்படுத்த வடிவேலு காமெடியை வைத்து அலப்பறை கொடுத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அதாவது ஒரு படத்தில் வடிவேலு தனது தொண்டர்களுக்காக உயிரை கொடுப்பேன் என்று கூறியிருப்பார்.
Also Read : பணத் திமிரில் கணவர்களை விவாகரத்து செய்த 6 பிரபலங்கள்.. காதல் கணவரை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இதை மனதில் வைத்துக் கொண்டு ஒருவர் அருவாவுடன் வெட்ட வரும்போது வடிவேலு ஓட்டம் பிடித்து விடுவார். அதேபோல் தான் பாடல் வரிகளில் மட்டும்தான் இதுபோன்ற எழுத முடியும் ரஜினிக்காக யாருமே இப்போது உசுரை எல்லாம் கொடுக்க முடியாது என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டிருக்கிறார்.
ஆனாலும் சும்மா சும்மா மீண்டும் ரஜினியை ப்ளூ சட்டை வம்பு இழுத்து வருவதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவரை விளாசி கமெண்ட் செய்து வருகிறார்கள். எதற்கும் அஞ்சாத ப்ளூ சட்டை மாறன் மீண்டும் ரஜினியை கிண்டலடித்து பதிவு போடுவார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான். அதுவும் குறிப்பாக ரஜினியை தான் ரொம்ப டேமேஜ் செய்து வருகிறார்.

Also Read : ரஜினியை ஏமாற்றிய தயாரிப்பாளர்.. லட்சத்தில் சம்பளம் வாங்கிய முதல் படம்