ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினியை ஒருமையில் பேசி வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை.. உங்க வயசுக்குன்னு ஒரு மட்டு மரியாதை இல்லையா!

Actor Rajini: ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்த நிலையில் முதலாவதாக தமன்னா குத்தாட்டம் போட்டுள்ள காவாலா பாடல் வெளியானது. இப்பாடல் இணையத்தில் பயங்கர ட்ரெண்டானது.

இதை அடுத்து சில நாட்களிலேயே ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிளான ஹுக்கும் பாடல் வெளியானது. இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினாலும் மற்ற ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகின்றது. அதாவது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக பல பேர் ஆசைப்படுகிறார்கள் என்ற வரிகள் இந்த பாடலில் இடம் பெற்றிருந்தது.

Also Read : பாட்டுல இல்ல நேரிலேயே ரஜினி பதிலடி கொடுக்க நேரம் வந்துருச்சு.. இளைய தளபதிக்கு ஆப்படிக்கும் நாள்

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அடிக்கடி ரஜினியை வம்பு இழுத்து சில பதிவுகளை போட்டு வருகிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் அவர் மீது செம காண்டில் இருக்கிறார்கள். ஆனாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத ப்ளூ சட்டை மீண்டும் வடிவேலு மீம்ஸை வைத்து ரஜினியை விமர்சனம் செய்துள்ளார்.

அதாவது ஐஸ்வர்யாவிடம் ப்ளூ சட்டை இந்தாம்மா உங்க அப்பனை வெளியே வந்து இந்த குட்டி சுவரை பார்க்க சொல்லு ஒரு சின்ன பஞ்சாயத்து இருக்கு என்று கூறுகிறாராம். அதற்கு ஐஸ்வர்யா அப்பன்னு டாடியை மரியாதை இல்லாம பேசாதீங்க, இதுக்குத்தான் கேட்டுக்கு உள்ள உங்களை விடறதே இல்ல, நான்சன்ஸ் என திட்டுகிறாராம்.

Also Read : உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் கல்லாக் கட்டும் 5 ஹீரோக்கள்.. ஸ்டைலை வைத்து 3 தலைமுறைகளாக அசத்தும் ரஜினி

உடனே கோவம் வருதுல்ல, அதேமாதிரிதான் எங்களுக்கும், எங்க அப்பாக்களை உங்கப்பன்னு ஒருமைல பேசுனா இப்படித்தான் கோபம் வந்துச்சு. உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? சொல்லி வை அவர்கிட்ட ரஜினியை பங்கமாக கலாய்த்து இந்த பதிவை போட்டிருக்கிறார்.

இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். அதுவும் உங்க வயசுக்குன்னு ஒரு மரியாதை இல்லாமல் ரஜினியை ஒருமையில் பேசி உள்ளீர்கள் என கடுமையாக சாடி வருகிறார்கள். என்னதான் ப்ளூ சட்டை இவ்வளவு கீழ்தரமாக பேசினாலும் கோபுரமாக ரஜினி எப்போதுமே உயர்ந்து தான் இருப்பார் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

blue-sattai-maran-trolled-rajini
blue-sattai-maran-trolled-rajini

Also Read : எதிர்நீச்சல் சீரியலை பற்றி குணசேகரனிடம் பேசிய ரஜினிகாந்த்.. ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

Trending News