திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யை வாண்டடா வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. ரெய்டிற்கு பிறகு புலி பாயுமா? பதுங்குமா?

தளபதி விஜயின் படம் ரிலீஸ் ஆவதை காட்டிலும் அவர்கள் உடைய படத்தின் ஆடியோ லான்ச் ஆக ரசிகர்கள் அதிதீவிரமாக காத்து இருப்பார்கள். ஏனென்றால் அதில் ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி ஒன்று சொல்வார். அதுமட்டுமின்றி சில பஞ்ச் டயலாக்குகளையும் அள்ளித் தெளிப்பார். இதுக்கு ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் கிடைக்கும்.

ஆனால் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் பங்க்ஷன் வைக்க முடியாமல் போனது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்ததால் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு சன் டிவியில் விஜய் பேட்டி கொடுத்திருந்தார். இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

Also Read : அவர் பேச்சை கேட்டு அப்பாவை டீலில் விட்ட விஜய்.. சைலன்டாக வேலை பார்த்த மனைவி

வாரிசு படம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தில் மூன்றாவது பாடலாக சமீபத்தில் அம்மா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்போது வருகின்ற 24ஆம் தேதி சென்னையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

இதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் வாண்டட் ஆக ப்ளூ சட்டை மாறன் விஜய்யை வம்பிழுத்துள்ளார். பட்டாசுக்கடை, பூக்கடை போன்ற அதிரடி அரசியல் பஞ்ச் பேசுவாரா அல்லது கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று பம்முவரா? என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.

Also Read : விஜய்க்கு விரித்த வலையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்.. மெகா கூட்டணியில் இணைந்த இளம் இயக்குனர்

மேலும் சமீபத்தில் விஜயின் வீடு மற்றும் கெஸ்ட் ஹவுஸ் போன்ற இடங்களில் வருமான வரி சோதனை நடத்தியதால் ஆடியோ லாஞ்சில் அரசியல் பேச வேண்டாம் என முடிவா என்றும் விஜயை கேள்வி கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி புலி பாயுமா? பதுங்குமா? என்று நக்கல் அடித்துள்ளார்.

ஏற்கனவே வலிமை படம் வெளியான போது அஜித்தை விமர்சித்து தேவையில்லாமல் அவரது ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். இப்போது விஜயை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளதால் ப்ளூ சட்டை மாறன் மீது விஜய் ரசிகர்கள் செம காண்டில் உள்ளனர். மேலும் இந்த பதிவின் கீழ் ப்ளூ சட்டை மாறனை மோசமாக அவர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.

blue-sattai-maran

Also Read : விஜய்யின் சோலியை முடிக்க திட்டம் தீட்டிய விஷால்.. வலையில் சிக்குவாரா தளபதி

Trending News