இப்போதெல்லாம் படத்தை பார்ப்பதற்கு முன்பு யூடியூபில் படத்திற்கான விமர்சனங்களை பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் மட்டுமே படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு செல்கிறார்கள். இதனால் தற்போது ஏகப்பட்ட பேர் திரைப்படங்களை யூடியூபில் விமர்சித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பல படங்களை தாறுமாறாக விமர்சித்து வருகிறார். இதனால் இவரது யூடியூப் சேனலுக்கு ஏராளமான ஃபாலோவர்ஸ் உள்ளனர். இந்நிலையில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை கூட மாறன் மோசமாக விமர்சித்துள்ளார்.
Also Read : சிம்புவை வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்.. உருவ கேலிக்கு இப்படி ஒரு பதிலடியா?
சிம்பு, கௌதமேனன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் சக்சஸ் மீட்டில் சிம்பு, முன்பு ப்ளூ சட்டை மாறன் உருவ கேலி செய்ததை குறிப்பிட்ட யாரும் அப்படி செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ப்ளூ சட்டை மாறனை யாராவது விமர்சித்தால் உடனே அவர்களைப் பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் ஏதாவது மோசமான பதிவு போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சிம்பு படத்தில் இடம்பெற்ற சில பாடல்வரிகளை குறிப்பிட்ட ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருந்தார்.
Also Read : இறங்கி ஒரு சம்பவம் செய்யணும் தோணுது.. ப்ளூ சட்டை மாறனுடன் கடும் கோபத்தில் கௌதம் மேனன்
இதைத்தொடர்ந்து இன்று ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனன் நேரடியாகவே ப்ளூ சட்டை மாறனை எச்சரிப்பது போல விலாசி இருந்தார். உடனே அதற்கும் அசராமல் பதிலடி கொடுத்துள்ளார் மாறன். அதாவது ஆரம்பத்தில் மின்னலே படத்தின் போது வெறும் கௌதம் என்று இருந்த இயக்குரரின் பெயர் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியுள்ளது.

ஜாதி பெயரை பின்னால் போட்டுக் கொள்ள விரும்பாத தமிழகத்தில் ஜாதியை அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் என சரமாரியாக தாக்கியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். தன்னை யாராவது விமர்சித்தால் பொறுத்துக் கொள்ள முடியாத ப்ளூ சட்டை மாறன், அடுத்தவர்களை மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக விமர்சிக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.
Also Read : வீடியோவை கட் செய்து தளபதியை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்.. இதெல்லாம் ஒரு பொழப்பா!