வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சூர்யா முதல் ராஜமவுலி வரை.. கங்குவா படத்தை வச்சு செய்யும் ப்ளூ சட்டை

Suriya : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு 4 மணி காட்சிகள் அனுமதித்த நிலையில் சூர்யா ரசிகர்கள் விடிய விடிய தியேட்டரில் நின்று படத்தை கண்டு களித்து வருகிறார்கள்.

இந்த படம் அதிக மொழிகளில் வெளியாவதால் ஒரு பான் இந்திய படமாக வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் படங்களை விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் கங்குவா படத்தையும் விட்டு வைக்காமல் விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவுகளை போட்டு வருகிறார்.

suriya
suriya

அந்த வகையில் ராஜமவுலி முதல் கங்குவா படக்குழுவினர் இப்படத்தை பற்றி கூறிய விஷயங்களை நினைவு கூர்ந்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அதாவது இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவா படம் 2000 கோடி வசூல் செய்யும் என்று கூறியிருந்தார்.

kanguva
kanguva

அதோடு தமிழின் முதல் பான் இந்தியா ஹிட் இதுதான் என்றும் 38 மொழிகளில் 11500 ஸ்கிரீன்களில் வெளியாகிறது. இரண்டு மணி நேரம் பத்து நிமிஷம் புல்லரிக்க வைக்கும் என்று எல்லாம் ஞானவேல் கூறியிருந்தார். அடுத்ததாக படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா கட்டுப்படுத்த முடியாத காட்டாறு, மரத்துல ஏற சொன்னா உடனே சூர்யா சர சரவென்னு ஏறிடுவாரு என பலவற்றை கூறியிருந்தார்.

blue-sattai-maran
blue-sattai-maran

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி பேசுகையில் பாகுபலி எடுக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் சூர்யா தான் என்று கூறியிருந்தார். மேலும் ஒளிப்பதிவாளர் வெற்றி பேசுகையில் திரை தீ பிடிக்கும் என்றெல்லாம் வசனங்களை அள்ளித் தெளித்து இருந்தார்.

devi-sri-prasad
devi-sri-prasad

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் இருக்கிற அண்டா, குண்டா, தோசை கரண்டில கூட மியூசிக் போட்டு காதை கிழிச்சு வச்சிருக்காரு. தலைவர் அண்ணாத்த ஷூட்டிங்கிலேயே சிறுத்தை சிவா கங்குவா பட கதையை சொல்லி உள்ளதாக கூறினார். இப்போது தலைவர் வீட்டிலேயே இல்லையாம் என வறுத்தெடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Trending News