Blue-Sattai-Maran-Iraivan: நேற்றைய தினம் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் திரையரங்குகளில் இறைவன் படம் வெளியாகி இருந்தது. குறிப்பாக ஜெயம் ரவி இதுவரை நடித்திடாத வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்திருந்தார். ஜெயம் ரவியின் ஆதிபகவன் படம் ஏ சர்டிபிகேட் வாங்கிய நிலையில் இப்போது இறைவன் படத்திற்கும் சென்சார் ஏ சர்டிபிகேட் தான் வழங்கி இருந்தது.
இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறைவன் படத்திற்கான விமர்சனத்தை கொடுத்துள்ளார். அதாவது படத்தில் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி மற்றும் அவரது நண்பர் இருக்கிறார்கள்.
இதில் தொடர்ந்து பல பெண்களின் கண்களைப் பறித்து ஒரு சைக்கோ கில்லர் கொலை செய்தார். அப்போது அவரை கண்டுபிடிக்க ஜெயம் ரவி மற்றும் அவரது நண்பர் தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள். அதில் கதாநாயகனின் நண்பர் உயிரிழந்ததால் இந்த வேலையே வேண்டாம் என்று போலீஸ் வேலையை ஜெயம் ரவி விடுகிறார்.
அதன் பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வரும் சைக்கோ கில்லர் மிகவும் கொடூரமாக மாறி அடுத்தடுத்த கொலைகளை செய்து வருகிறான். இதனால் போலீஸ் வேளையிலே இல்லாத ஜெயம் ரவி இந்த கொலையாளியை கண்டுபிடிக்கிறார். இவ்வாறு பத்து பைசா கூட மூளையை செலவழிக்காமல் ஹாலிவுட் மற்றும் டிவிடி வீடியோக்களை பார்த்து இறைவன் இயக்குனர் படத்தை எடுத்து வைத்திருக்கிறார் என ப்ளூ சட்டை கழுவி ஊற்றி உள்ளார்.
Also Read : இறைவனை விட மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்த சந்திரமுகி 2.. வேட்டையனின் வசூல் வேட்டை ஆரம்பம்
மேலும் படத்தில் இருக்கும் வில்லன் எந்த எக்ஸ்பிரஷனும் கொடுக்கவில்லை. அதுவும் வில்லனை பார்த்தால் பயமும் இல்லை, நடக்கும் கொலைகளை பார்த்தால் அச்சமும் ஏற்படவில்லை. ஒரு படம் ஏ சர்டிபிகேட் வாங்குகிறது என்றால் பல சிக்கலை சந்திக்க நேரிடும். ஓடிடி போன்றவற்றில் வெளியிட முடியாது. அப்படியும் நம்பி தயாரிப்பாளர் இந்த படத்தை இயக்குனரிடம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் இயக்குனர் மொத்தமாக படத்தை சொதப்பி வைத்துள்ளார். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை பார்க்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று ப்ளூ சட்டை மாறன் இறைவன் படத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
Also Read : இந்த வாரத்துல சந்திரமுகி 2, இறைவனை தும்சம் செய்த படம்.. கமலின் மகாநதி படத்தைக் கொண்டு உருவாக்கிய இயக்குனர்